மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
குருதி சம்மந்தமான > தீய கொலஸ்ரோல்
தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போதுமானதாகும். மேலதிகமான கொலஸ்ரோல் நாடிக்குருதிக் குழாய்களில் படிகின்றது. இதயத்திற்கு குருதியை வினியோகிக்கும் குருதிகுழாயும் இதற்கு விலக்கல்ல. படிவுகளினால் குழாயின் விட்டம் குறைவடைவதோடு, இரத்தோட்ட தடை ஏற்ப்படுவதனால் இதய வருத்தத்திற்குரிய அறிகுறிகள் தோன்றக் காரணமாகின்றன. குருதியிலுள்ள கொழுப்பினளவை (கொலஸ்ரோல); அறிந்துகொள்ள, 8 - 12 மணிநேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தபோது, காலையில் பெறப்பட்ட குருதியிலிருந்து அளக்கப்படுகின்றது. குருதியில் கொழுப்பு அகத்துறிஞ்சப்பட்டதிலிருந்து, கொழுப்பு உடலில் பேணப்படுவதற்கான நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன. உறிஞ்சப்பட்ட கொழுப்பு ஈரலை நோக்கிப் புறப்படுகின்றது. கொழுப்பு ஏனைய உடற்கலங்களால் உடனடியாகப் பயன்படுத்தபடுவதற்காக ஒரு எடுத்துச்செல்லும் வழிமுறை ஒன்றை வேண்டி நிற்கிறது. எஞ்சிய கொழுப்பு பின்னைய தேவைக்காக கொழுப்புக் கலங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பு எடுத்துச் செல்லும் வழிமுறைக்குள் உட்புகு முன்னர் ஈரலில் உள்ளபொழுதே, இரண்டு வகையான கொழுப்பாக – கொலஸ்ரோல், ற்ரைகிலிசெரைட்ஸாக பிளவடைகின்றது. இந்த பிளவு ஏற்ப்பட்ட பின்னர், இருவகையான கொழுப்புகளும் கொழுப்பு காவிகளில் ஏற்றப்பட்டு, குருதி சுற்றோட்டம் வழியாக உடல் முழுவதும் காணப்படும் கொழுப்புக் கலங்களிற்கு வினியாகிக்கப்படுகின்றது. இந்தக் கொழுப்புக் காவிகள் கொழுப்புப் புரதங்கள் (லிப்போபுறோரீன்ஸ்) என அழைக்கப்படும். மூன்று வகையான கொழுப்பு புரதங்கள்: 1. மிகவும் குறைந்த அடர்த்தியுடைய கொழுப்புப் புரதங்கள் (வி.எல்.டி.எல்). 2. குறைந்த அடர்த்தியுடைய கொழுப்பு புரதங்கள் (எல்.டி.எல்). 3. அடர்த்தி கூடிய கொழுப்புப் புரதங்கள் (எச்.டி.எல்.). இது தீய கொலஸ்ரோலை (வி.எல்.டி.எல், எல்.டி.எல்) ஐச் சேகரித்து ஈரலுக்கு அனுப்புவதனால், நல்ல கொலஸ்ரோலாக அறியப்படுகின்றது. சாதாரண நிலைகளில் எல்.டி.எல், எச்.டி.எல் கொழுப்புப் புரதங்களை உடல் முழுவதும் எடுத்துச்செல்வதில் குருதிச் சுற்றோட்டம் மிகவும் நன்றாகவே தொழிற்படுகினறது. கொலஸ்ரோல் சேதப்பட்ட நாடிக்குழாய்களின் உட்புற சுவர்களில் மட்டுமே இணைந்து கொள்ளும். நாடிக்குழாயின் உட்சுவரின் சேதமேற்படும் பொழுது, அப்பகுதிக்கு குருதி வெண்குழியங்களும் அதைத் தொடர்ந்து கொலஸ்ரோல், சுண்ணாம்பு சத்து (கல்சியம்), சிதைவடைந்த கலச்சிதறல்களும் விரைவில் சென்றடையும். இந்த நாடிக் குழாயைச் சூழ்ந்த தசைக் கலங்களில் மாற்றமேற்படுவதுடன், கொலஸ்ரோல் படிவடைகிறது. இந்த கொழுப்பு படிவுகள் தொடர்ச்சியாக ஏற்படும்பொழுது நாடிக்குழாய்கள் வீக்கமடைகின்றன. இந்த தடிப்படை சுவரில் மேற்பகுதி தடிப்படைந்து, கொலஸ்ரோலும் கலச்சிதைவுகளும் கலந்த ஓரு தடிப்பான தளிம்பொன்றை ஏற்படுத்துகின்றது. இவ்வகையான கொழுப்பு சேர்ந்து தடிப்படைந்து தளிம்பொன்றினால் மூடப்பட்ட நிலையை ‘பிளாக்’ என்று கூறப்படுகின்றது. இப்படியான படிவுகள் நாடிக்குழாய்களின் விட்டத்தைக் குறைப்பதனால், குருதி ஓட்டம் குறைவதனால் குருதி காவிச் செல்லும் ஒட்சிசனினதும், ஏனைய போசாக்குப் பொருட்களினதும் அளவு குறைவாகவே சென்றடைகின்றது. இது குருதிக் கலன்களால் இழையங்களுக்கு வழங்கப்படும் குருதிஇ ஒட்சிசன் ஆகியவற்றின் அளவு குறைவடைந்துபோகின்றது. நாடிக் குருதிக் குழாய்களின் மீள்தன்மை குறைவடைவதோடு, நாடிக்குழாயின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் மாற்றத்திற்குள்ளாகிறது. ஒடுக்கமான நாடிகளினூடாக இதயத் தசைக்குப் பாயும் குருதியில் போதியளவு ஒட்சிசன் இல்லாதபோது இதயம் ‘நோவு’ என்னும் சமிக்ஞை அறிவிக்கிறது. இந்நிலை ‘அஞ்சைனா’ எனக் கூறப்படும். இந்த நோ உடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படுகினறது. ஏனெனில் இவ்வேளையில்தான் இதயத்திற்கு ஒட்சிசன் கூடுதலாக தேவைப்படுகிறது. இது வழமையாக இடது மார்பின் இடது கை, தோள் மூட்டுப் பக்கமாக உணரப்படும். சிலசமயம் எதுவித அறிகுறி இல்லாமலே ஏற்ப்படக்கூடும். கொழுப்புப்படை (பிளாக்) அளவிலும், அமைப்பிலும் வேறுபட்டிருக்கலாம். இதய நாடிக் குழாய்களில் அரைவாசிக் குழாயை மூடக்கூடிய கொழுப்பு படிவு இருந்த பொழுதிலும், பெரும்பான்மையான படிவுகள் வெற்றுக் கண்ணிற்குப் புலப்படாதவையாகும். மருத்துவ சமூகம் பெரிதான கொழுப்புப்படிகள், இதய நாடியை முற்றாக அடைத்துவிடக்கூடும் என்பதனால் மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையாக இருந்த பொழுதிலும் , தடிப்படைந்து மூடப்பட்டிருக்கும் சிறிய கொழுப்புப் படிவுகள் மேலும் ஆபத்தானவையாகும். இவை வெடித்துச் சிதறி இரத்தவோட்டத்தில் கொழுப்பு படிவுகளின் சிதறல்களை விட்டுவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நாடிக் குழாயினுள்ளே குருதி உறைவு உடனடியாக ஏற்படுகின்றது. உறைந்த குருதி நாடிக்குழாயில் குருதிப் பாய்ச்சலை முற்றாகத் தடுக்க, இதயத்திற்கு குருதி கிடைக்காத பொழுது மார்படைப்பு (காட் அற்ராக்) ஏற்படுகின்றது. குருதி உறைவு ஏற்ப்பட்ட இடத்திற்கு தொலைவாக உள்ள தசைக்கலங்களிற்கு ஒட்சிசன் (பிராணவாயு) கிடைக்காமல் போவதனால், அவை இறக்க ஆரம்பிக்கின்றன. இவ்வகையான சேதங்கள் நிரந்தரமானவை. இப்பொழுது நீங்கள் உங்கள் கொலஸ்ரோல் அளவுகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். உங்களின் குடும்ப வைத்தியரினூடாக அளவுகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், பின்வரும் அட்டவணையுடன் ஒப்பிட்டு பாருங்கள். இரத்த சுற்றோட்டத் தொகுதி நோய்நிலை அபாயநிலை குறிகள்: கொலஸ்ரோல்(மி.மோல் - லீற்றருக்கு) உச்ச அபாயம் ;: 3.1க்கு மேல் 8.5க்கு கீழ் மத்திய நிலை அபாயம் : 6.2 க்கு கீழ் ஆரோக்கியம்: 4.9 இலிந்து 5.4 வரை கொலஸ்ரோல் அல்லது எச்.டி.எல் உச்ச அபாயம்; 8:1 க்கு கீழ் மத்திய நிலை அபாயம்: 5:1 க்கு கீழ் ஆரோக்கியம் : 3.5:1 க்கு மேல் என்ன செய்யலாம்? வுழமையாக உயர்வான கொலஸ்ரோல் அளவு குருதியில் இருக்குமாயின் அதைக் முடிந்த அளவுக்கு குறைக்கவேண்டும். விஞ்ஞான ஆய்வுகள் என்னத்தை எடுத்துக்கூறிய பொழுதும், கொலஸ்ரோலின் அளவை மிகவும் குறைக்கும் பொழுது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. (உதாரணமாக ஸ்ரோக், மனவழுத்தம், வலுச்சண்டைக்குப் போதல், சிலசமயங்களில் தற்கொலை முயற்சி). இப்பொழுது எங்களது நோக்கம் உடலின் கொலஸ்ரோல் அளவை ஆரோக்கிய நிலைக்குரியதான 4.9 – 5.4 மி.மோல் - லீற்றருக்கு அளவில் வைத்திருப்பதாகும். உணவு குருதியில் கொலஸ்ரோலின் அளவை எவ்வாறு பாதிக்கும்? உணவு: உணவிலிருந்து 20மூ கொலஸ்ரோல் மட்டுமே கிடைக்கிறது. எஞ்சிய 80சதவீதம் கொலஸ்ரோல் ஈரலினால் உற்பத்திசெய்யப்படுகின்றது. ஆயினும் அதிகளவு நிரம்பிய கொழுப்புகளும், கொலஸ்ரோல் அளவில் கூடிய உணவுகளை உண்ணும் பொழுது ஈரல் மேலும் எல்.டி.எல் ஐ உற்பத்தி செய்ய தூண்டக்கூடும். உணவின் மூலம் உற்பத்தியாகும் எல்.டி.எல்லின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாக காணப்படுவதோடு, பரம்பரையாக கடத்தப்படுவதாகவும் கருத இடமிருக்கிறது. உணவில் அதிக கொழுப்புணவை உட்கொண்ட சிலருக்கு உயர் கொலஸ்ரோல் அளவு காணப்பட்ட பொழுதிலும், வேறு சிலருக்கு அதே உணவிற்கு சாதாரண அல்லது குறைந்தளவு கொலஸ்ரோல் காணப்படுகின்றது. - உணவில்; கொழுப்பை குறைக்கவேண்டும்: கொழுப்பு குறைந்த இறைச்சியைத் தெரிவு செய்யவேண்டும். சிவப்பு நிற இறைச்சிக்குப் (சிவப்பு இறைச்சி) பதிலாக கோழியிறைச்சி (தோல் நீக்கிய), மீன்வகைகளை உணவாக கொள்ளவேண்டும். குறைந்தளவு கொழுப்பைக் கொண்ட பாற்கட்டி (சீஸ்), தயிர், கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்ட் மில்க்) போன்றவற்றை உணவில் சேர்க்கவேண்டும். - பொரித்த உணவை தவிர்க்கவேண்டும்: கொழுப்பு குறைந்த எண்ணையில் ஆரம்பத்தில் பொரிக்கலாம். பின்னர் சமையல் முறையில் கொழுப்பு தவிர்ந்கும் முறையைக் கையாளவேண்டும். இதனால் கொலஸ்ரோல் மீண்டும் உணவினூடாக உடலைச் சென்றடைவதைத் தவிர்க்கலாம். கோழி, ரேக்கி கோழி போன்வற்றின் தோலை அகற்றவும். பொரித்த உணவை தவிர்க்கவும். பதிலாக, கொழுப்பை வடிக்கக்கூடிய முறையில் (பேக், றோஸ்ற், கிறில், போச்) சமைப்பதோடு. தாளிப்பதற்கு ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம்.. -மரக்கறிவகைகளையும் சிக்கலான காபோவைதரேற்றுக்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்: உணவில் புதிதாக தருவிக்கப்பட்ட, மரக்கறி வகைகள், பழங்கள் போன்றவற்றுடன் புறவுன் அரிசி, பச்சைப்பருப்பு, விதைகள், ரேக்கி கோழி, மீன், முழுத்தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்ட, அவசரமாக தயாரிக்கப்படும் உணவு வகைகளை முற்றாகத் தவிர்க்கவேண்டும். கொலஸ்ரோல் அளவைக் குறைக்கக்கூடிய அப்பிள், வாழை, கரட், நன்நீர் மீன் வகைகள், உலர்த்திய அவரைவகை, உள்ளி, திராட்சைப்பழம், ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். - நார்ச்சத்துணவு (பைவர்): பழங்களிலிருந்தும், முழுத்தானியங்களிலிருந்தும், மரக்கறிகளிலிருந்தும் போதியளவு நார்;ச்சத்து உணவில் சேரவேண்டும். நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து குருதியிலுள்ள கொலஸ்ரோலைக் குறைக்க முக்கியமானதாகும். - உடனடியாக பிளிந்த சாறுகள்: குறிப்பாக கரட், சிலெறி, பீற்றூட்டின் சாறுகள் மிகவும் நல்லது. கரட் சாறு ஈரலிலிருந்து கொழுப்பை தள்ளிவிடுவதால் கொலஸ்ரோலின் அளவைக் குறைக்க உதவுகின்றது. - எடைக் குறைப்பு: உடல் எடை அதிகமானவர்களில் பலருக்கு உயர்ந்த கொலஸ்ரோல் அளவு காணப்படுகின்றது. இவர்கள் எல்.டி.எல் கொழுப்பளவைக் குறைத்து எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்க வேண்டும். - கொட்டை, விதை வகைகள்: உப்பு சேர்க்காத வோல்நட், ஆமண்ட்ஸ் விதைகள், கொட்டைகள் மிகவும் நல்லது. 3 அவுன்ஸ் வோல்நட்ஸ் தினமும் உண்பதால் கொலஸ்ரோல் அளவு குறைவதாக அறியப்பட்டுள்ளது. வோல்ந்ஸ் பல நிரம்பிய கொழுப்புகளைக் கொண்டிருப்பதால் கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதாக செயற்படுகின்றது. ஆமண்டில் தனிவகை நிரம்பிய கொழுப்பைக் கொண்டிருப்பதோடு, எல்.டி.எல்லின் அளவை குறைக்கிறது. அத்துடன் ஆஜினின் என்னும் அமினோ அமிலத்தையும் கொண்டிருக்கின்றது. - உள்ளி: உள்;ளி கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதாக பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. போதியளவு உள்ளியை உணவில் சேர்க்க வேண்டும். உள்ளி எச்.டி.எல்லின் அளவை உயர்த்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. - புகைத்தலை முற்றாக நிறுத்தவும்: புகைத்தலை எப்படி அணுகினாலும் மிகவும் பாதகமான விளைவுகளையே தருகின்றது. புகைத்தல் நுரையீரலைப் பாதிப்பதை விட இதயத்தையே பாதிக்கின்றது. புகையில் எரியும் போது கிடைக்கும் புகையில் காபன் மொனொக்சைட் இதயத்தைப் பாதிக்கின்றது. அத்துடன் நிகோரின் என்னும் இரசாயனப் பதார்த்தம் இதய துடிப்பு நடைபெறுவதற்கான கணத்தாக்கங்களுடன் குறுக்கிடுகிறது. இதனால் இதய துடிப்பு அதிகரிப்பதோடு, ஒழுங்கற்ற துடிப்பும் ஏற்ப்படுகின்றது. - சீனியினளவைக் குறைக்கவேண்டும்: உடலின் சீனியினளவு கொலஸ்ரோலின் அளவை பாதிக்கின்றது, அத்துடன் நிட்சயமாக ற்றைகிளிசரைட்ஸை பாதிக்கிறது. குருதி வெல்ல அளவு இன்சுலின் சுரப்பை தூண்டுவதனால் ற்றைகிளிசரைட்ஸ் அளவும் அதிகரிக்கிறது. குறோமியம் என்னும் குருதி வெல்ல அளவை சமநிலைப்படுத்தப் பயன்படும் கனிப்பொருள் (மினறல்), எச்.டி.எல் கொழுப்பையும் அதிகரிக்கிறது. - தினந்தோறும் உடற்பயிற்ச்சி : போதியளவு உடற்பயிற்ச்சி எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து எச்.டி.எல் கொழுப்பை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. வேகமான நடை, நீந்தல், துவிச்சக்கரவண்டி ஓடுதல், மெதுவான ஓட்டம் (ஜொக்கிங்) போன்றன கொலஸ்ரோல் மட்டத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகின்றது. - கோப்பி, மதுபானம், காபனேற்றற் பானங்கள் போன்றவற்றோடு, கேக் வகைகள், இனிப்புப் பண்டங்களையும், முன் தயாரித்த உணவுகளையும் முற்றா தவிர்க்கவேண்டும். - உப்பினளவைக் குறைத்து, பொட்டாசியத்தினளவைக் கூட்டவேண்டும்: நாளொன்றிற்கு 2300மி.கி. க்கு ( ஏறக்குறைய 1 தேக்கரண்டி) குறைவாக உப்பு உணவினூடாக உட்கொள்ளப்படும் பொழுது உயர் குருதி அழுத்தம் தோன்றுவதற்கான அபாயம் குறைவாகவுள்ளது. முன் தயாரிக்கப்பட்ட உணவிலிருந்தே அதிகளவு உப்பு உட்கொள்ளப்படுகிறது. பொட்டாசியத்தினளவு கூடுதலான உணவுகள் நன்மைபயக்கும்இ ஏனெனில் இது உப்பின் (சோடியம்) செயற்பாட்டிற்கு எதிராக குருதி அழுத்தத் செயற்பாட்டில் தொழிற்படுகிறது. - மனவழுத்தம் - மனச்சுமை (ஸ்றெஸ்) குறைத்து வையுங்கள்: மனவழுத்தமும் உயர் குருதி அழுத்தத்திற்கு காரணமாகலாம் என விஞ்ஞான ஆய்வுகள் கருதுகின்றன. உடல் மனவழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் பொழுது மனவழுத்த ஓமோன்கள் வழமைக்கு மாறான இரசாயன தாக்கங்களில் ஈடுபடுவதனால், கொலஸ்ரோல் இலகுவில் நாடிக் குழாய்களில் படிய வாய்ப்பளிக்கிறது. மேலும் வெளிவிடப்படும் ஓமோன்கள், கொலஸ்ரோல் சமிபாட்டை ஏற்படுத்த தேவையான அமினோ அமிலங்களில் அமைப்பு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. உயர் இரத்தவழுத்தத்தையும், உயர் கொலஸ்ரோல் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் மனவழுத்த நிலையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். தினந்தோறும் உடல் அப்பியாசம், சுவாசக் கட்டுப்பாடு, தியானம், யோகப் பயிற்ச்சி போன்றன மனவழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகவும் சிறந்த சாதனங்களாகும். - கொலஸ்ரோலும் ஆண்மையின்மையும்: கொலஸ்ரோலின் அளவு உயர்வாகவுள்ள ஆண்களில், சாதாரணமான அளவு அல்லது குறைவாகவுள்ளவர்களைக் காட்டிலும் இருமடங்காக அளவில் ஆண்மையின்மை இருக்கலாம் என அண்மையான ஆய்வுகள் கூறுகின்றன. கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கும் பொழுது, உடலுறவின் போது ஆண்குறியை விறைப்பாக தக்கவைப்பது குறைவடைந்து போகின்றது. எச்.டி.எல்லில் அளவு குறைவாக உள்ளவர்களும் ஆண்மைத் தன்மைக் குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். உணவில் அதிக கொழுப்பு உள்ளபோது, இது நாடிகளில் படிந்து குருதி ஓட்டத்தைக் குறைப்பதனால், இதயத்திற்கும், ஆண்குறிக்குமான குருதியனளவு குறைவாகவே கிடைக்கின்றது. வேண்டிய அளவிற்கு குறைவாக குருதி ஆண்குறிக்கு கிடைக்கும் பொழுது, உடலுறவின் போது விறைப்புத் தன்மையைத் தக்கவைக்க முடியாமல் போகிறது. மூலிகை கலவை: கூகுல் பிளஸ்: இதுவொரு சிறப்பான மூலிகைக் கலவையாகும். இதில் உள்ள மூலிகைகள், உடலில் ஆரோக்கியமான கொலஸ்ரோல் அளவைப் பேணுவதற்காக கலக்கப்பட்டுள்ளன. நல்ல ஆரோக்கியத்தைத் தரவல்ல உணவு, தினந்தோறும் உடல் அப்பியாசத்துடன் கூடவே இந்த மருந்துக் கலவையையும் எடுப்பதனால் எச்.டி.எல் (நல்ல) கொழுப்பினளவை அதிகரித்து எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவைக் குறைக்கலாம். மேலும் நாடிக் குழாய்களின் உட்சுவரில் ஏற்படக்கூடிய சேதத்தையும் குறைக்கலாம். கொலஸ்ரோலைக் குறைப்பதற்காக மருந்தெடுக்கும் பலருக்கு இதுவொரு மூலிகையாலான மாற்று மருந்தாகும். மூலிகை கலவை: கூகுல் பிளஸ் பின்வரும் மூலிகைகளைக் கொண்டுள்ளது : கூகுல் (கொமிபோறா முக்குல்): கூகுல் உடலில் நடைபெறும் கொழுப்பின் ஆக்கச்சிதைவு (மெற்ராபோலிசம்) நடைமுறையை ஒழுங்காக்கி வைத்திருப்பதனால் கொலஸ்ரோல், ற்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றின் அளவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் இது ஈரல் கலங்களை தூண்டி ஆக்கச் சிதைவினை அதிகரிப்பதால் எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவு அகற்றப்படுகின்றது. இதன் விளைவாக நாடிக் குழாய்களில் சேதம் குறைவாகவே ஏற்படுகின்றது. மேலுமிது குருதிப் பாயத்திலுள்ள கொலஸ்ரோல்;, ற்ரைகிளிசரைட்ஸ்;, எல்.டி.எல், வி.எல்.டி.எல் ஆகியவற்றின் அளவைக் குறைக்கின்றது. இதனால் குருதிக் குழாய் உட்சுவர் தடிப்படைதல் தவிர்க்கப்படுகிறது. கூகுலில் காணப்படும் கூகுலிப்பிட் என்னும் இரசாயனமானது;, குழாய்களில் முன்னேற்பட்டிருக்கும் படிவுகளை அவற்றின் முன்னைய நிலைக்கு எடுத்துச்செல்லவைக்கின்றது. மேலும் குருதிக் குழாயினுள் குருதியுறைவைக் குறைப்பதனால் ஸ்றோக் நடைபெறும் நிலைகளைத் தவிர்க்க முடியும். கொலஸ்ரோல் குருதிக் குழாயில் படிந்து ஒட்சியேற்றம் பெற்று தடிப்படைதலை கூகுல் தடுக்கிறது. அத்துடன் உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைக்கவும்;, உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. மூலிகை: ஆட்டிசோக் (சயனாரா ஸ்கொலிமஸ்): ஆட்டிசோக் என்னும் மூலிகையானது, ஈரலில் கொலஸ்ரோல் இன் உற்பத்தியைக் குறைக்கவும், கொலஸ்ரோல் பித்தநீராக மாற்றப்படுவதையும் தூண்டக்கூடும். கொலஸ்ரோலை பித்தநீராக உடலினால் மாற்றமுடியாமல் போகும்போது, குருதிப் பாயத்தில் கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கிறது. ஆட்டிசோக் கொலஸ்ரோல் சமிபாட்டைத் தூண்டி கழிவை சமிபாட்டுக் கால்வாயினூடு வெளியகற்றுவதோடு, ஈரலில் குறைந்தளவு கொலஸ்ரோல் மட்டுமே உற்பத்தியாகுமாறு கட்டுப்படுத்தி இரு வழிகளில் செயற்படுகிறது. மூலிகை: உள்ளி (அலியம் சற்றைவம்): உள்ளி மூலிகையானது குருதிப்பாய கொலஸ்ரோல் அளவைக் குறைவாக செய்வதனால், சிறந்த குருதிச் சுற்றோட்டத்தைப் பேணுகிறது. அத்துடன் எல்.டி.எல் கொழுப்பினளவைக் குறைத்து எச்.டி.எல் இன் அளவை உயர்த்துகிறது. உள்ளியில் கிடைக்கும் செலேனியம் என்னும் கனிப்பொருள் நாடிக்குழாய்களில் கொலஸ்ரோல் ஒட்டாவண்ணம் கவனித்துக்கொள்கிறது. அலிசின் என்னும் உள்ளியில் காணப்படும் இரசாயனப் பதார்த்தம் எச்.டி.எல் கொழுப்பை பித்தப்பையிற்கு கொண்டு செல்லும் காவிகளினளவை உயர்த்துகிறது. மூலிகை: கீ சோ வு ( பொலிகோனம் மல்ரிபுளொறம்): இந்த மூலிகையில் காணப்படும் பல இரசாயனங்கள் சேர்ந்து கொலஸ்ரோல் இன் அளவை குறைப்பதாக செயற்படக்கூடும். குருதிக் குழாக்களை வலுப்படுத்தி அகலப்படுத்துவதனால் உடலில் குருதிச் சுற்று ஆரோக்கியமடைகிறது. இவ்வேளையில் குருதியழுத்தம் குறைக்கப்படுவதனால், இதயம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், குருதி உறைவும் தவிர்க்கப்படுகிறது. மேலும் நாடிக் குழாய்களில் கொழுப்புப் படிவை இல்லாதொழித்தால், நாடிக்குழாய் தடிப்படைதல் நோய் தோன்ற வாய்ப்பு இல்லாது போவதோடு இரத்தோட்டம் சம்பந்தமான நோய்களின் அபாயமும் குறைவடைய உதவக்கூடும். மூலிகை: அர்யுனா (ரெமினேலியா அர்யுனா): அர்யுனா பட்டையின் பிளிவு பலகாலமாக, நல்ல குருதிச் சுற்றோட்டத் தொகுதியைப் பேண பயன்படும் மூலிகையாகும். இது ஈரலில் கொலஸ்ரோல் உருவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் கொலஸ்ரோல், ற்ரைகிளிசரைட்ஸ் அளவைக் குறைவடைய செய்யக்கூடும். இம் மூலிகைகள் யாவும் கூட்டுச் சேர்ந்தால் கிடைக்கும் விளைவுச் சேர்மானமானது, கொலஸ்ரோலின் அளவைக் குறைவடையச் செய்வதோடு, குருதிச் சுற்றோட்ட தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றே பேணக்கூடும். இதற்காகவே, இதிலடங்கிய மூலிகைகள் அதியுச்ச பலனைத தருமாறு வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. குறைநிரப்பிகள் (சப்பிலிமென்ஸ்): லிச்சதின் லிச்சதின் என்பது ஒரு தொகுதி உடலாரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்புப் பொருட்களாகும். மூளையின் செயற்பாட்டை மேன்மைப்படுத்துவதோடு, பித்தப்பைக் கல்லகற்;றலிலும் பயன்படுகிறது. மேலும், உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்ரோலை குடலில் குறைவாக அகத்துறிஞ்ச செய்வதனால், உடலில் கொலஸ்ரோலின் அளவு குறைவடைகிறது. குறைநிரப்பி: வன் ஏ டே பிளஸ்: உயிர்ச்சத்து: ‘சி’ கல்சியம், உயிர்ச்சத்து ஈ உடன் கூட உயிர்ச்சத்து சி யும் முக்கியமானதாகும். உயிர்ச்சத்து சி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை தூண்டுவதற்கு முக்கியமானதோடு, எச்.டி.எல் அளவையும் கூட்டுகிறது. குறைநிரப்பி : றெட் ஈற் றைஸ் இது ஈரலில் உற்பத்தியாகும் கொலஸ்ரோலின் அளவை மட்டுப்படுத்துகிறது. மேலும் எச்.டி.எல் லினளவை உயர்த்துவதோடு, எல்.டி.எல், ற்றைகிளிசரைட் அளவைக் குறைக்கிறது. இந்த மருந்து கிறேப் புறூட் பழரசத்துடன் எடுக்கக்கூடாது. குறைநிரப்பி: கோமோசிற்ரீன் மொடியுலேற்ரஸ்: கோமோசிற்ரீன் என்பது புரத ஆக்கச்சிதைவுத் தாக்கங்களின் போது விளைவாகிறது. மெதியோனின் தாக்கங்களின் போது விளைவாகிறது மெதியோனின் என்னும் அமினோ அமிலம் புரதக் கட்டமைப்பின் ஒரு கூறாகும். இது கோமோசிற்ரீனாக மாற்றப்படுகிறது. உயிர்ச்சத்து ‘பி6’, போலிக் அமிலம், உயிர்ச்சத்து ‘பி12’ ஆகியன கோமோசிற்ரீனின் அளவைக் குறுகிய காலத்தில் குறைப்பதாக ஆய்வுகள் முறைமாறாமல் காட்டி நிற்கின்றன. மேலும் பல ஆய்வுகள், மார்படைப்பு, ஸ்ரோக் போன்ற நிலை தோன்றக் காரணமான நாடிக்குழாய்கள் ஒடுங்குவதற்கு கோமோசிற்ரீன் காரணமாகின்றது என்பதைக் காட்டிநிற்கின்றன. ஆழ் நாளக் குருதியுறைவுட் (டீப் வெயின் த்திறொம்போசிஸ்) உட்பட்ட பல குருதிக் கலன் குழறுபடிகளுடன் கோமோசிற்ரீன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அல்சைமேர்ஸ் நோய், ஞாபக இழப்பு (டிமென்சியா), கல மாறல்கள் , சிறு நீர் தட குறைபாடுகளிலும் கோமோசிற்ரீன் ஒரு அங்கம் வகிக்கிறது. பீற் கிழங்கில் கிடைக்கும் ற்றைமெதைல் கிளிசைன் ஒரு றீமெதைலேசன் ஊடாக, கோமோசிற்ரீனை மெதியோனினாக மாற்றுவதற்கு மிகவும் சிறந்ததாகும்.
Top