info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

டிப்பிறசன் - மன விரக்திநிலை

டிப்பிறசன் என்ற மன விரக்திநிலை: நாம் எல்லோருமே அவ்வப்போது கவலையும் மன வருத்தமும் அடையத்தான் செய்கிறோம். கவலையையும் மன வேதனையையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும் சோர்வடைவதும் சகஜமானது தான். அனேகமாக பல நேரங்களில் இது இயல்பாக மறைந்துவிடுகிறது. ஆனால் டிப்பிறசன் என்ற ‘மனோவிரக்தி’ நிலையை அடையும் போது இந்த சோர்வும் கவலையும் இடைவிடாது நீடித்து விடுகிறது, அல்லது இந்தக் கவலையும் சோர்வும் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தி குழப்பிவிடவும் செய்கின்றன. டிப்பிறசனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக சமூகத்தை விட்டுவிலகியும் மறைந்தும் இருக்க முற்படுகின்றனர். தம்மைச் சுற்றியுள்ள விடயங்கள் மீதான ஆர்வமும் அவர்களுக்கு அற்றுப்போகிறது. இதனால் வாழ்வில் மகிழ்ச்சியையோ இன்பத்தையோ அனுபவிக்க முடியாது தனித்து விடுகின்றார்கள். டிப்பிறசனுக்கான அறிகுறிகள்: நித்திரைக் குழப்பம், கடும் களைப்பும், சோர்வும், காலையில் எழுந்திருக்கமுடியாமை, பசியின்மை, தம்மைப்பற்றிய பெறுமதி குறைவான நினைப்பு, தான் எதற்கும் வாயக்கில்லை என்று தோன்றுதல் போன்றன இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால் இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இதுபோன்ற மனோ நிலையுடன் ஒருவர் தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை, இது தற்காலிகமான மனச்சிக்கல் என்பது தான். டிப்பிறசன் பொதுவாகவே சமூகத்தில் காணப்படக்கூடிய சாதாரண நோய் நிலைதான், எம்மில் ஐந்து பேரில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் இது வந்து போவதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இதுபற்றி அச்சப்படவோ வெட்கப்படவோ, சங்கடப்படவோ கூடாது. இதனைப் புறக்கணிக்கவும் கூடாது. டிப்பிறசன் இற்கு உட்பட்டவர்கள் பொருத்தமான சிகிச்சைகளின் பின்னர் முற்றாகவே இதிலிருந்து குணமடைந்து விடுகின்றனர். இதற்கு சுகமளிக்கக்கூடிய மூலிகைகள் உணவுக்குறைநிரப்பிகள் என்று பார்க்கும்போது, சென்ற்.ஜோன்ஸ் வோர்ட் என்ற மூலிகை மிகுந்த பயன்மிக்கதாக விளங்குகிறது. டிப்பிறசனை வெகுவாகக் குணப்படுத்துவதில் இம்மூலிகையின் ஆற்றலை மருத்துவக்கற்கைகளும் உறுதி செய்கின்றன. ஆனால் டிப்பிறசனிற்கு எடுக்கும் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து இதனை எடுக்கக்கூடாது. குறைநிரப்பி – அத்தியாவசிய கொழுப்பமிலங்கள்; (எசென்ஸ்சியல் பற்ரி அசிட்): உணவின் ஊடாக உடலுக்குத் தேவையான ஓமேகா – 3 முதல் ஓமேகா -6 வரையினுமான கொழுப்பு அமிலங்களை ஆரோக்கியமாக சமப்படுத்தி பேணாதுவிட்டால் டிப்பிறசன் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. இதில் ஓமேகா 3 என்ற கொழுப்பமிலமானது நரம்புக் கலங்களின் முக்கியமான அங்கமாகும். கலங்கள் ஒன்றுடன் ஒன்று தமக்கிடையே தொடர்பு கொள்வதற்கு இது உதவுகின்றது. மனநல ஆரோக்கியம் நன்றாக பேணப்படுவதற்கு கலங்களுக்கு இடையேயான இந்த தொடர்பாடல் ஆரம்ப அடிப்படையாக அமைகின்றது. உயிர்ச்சத்து வி.எம் 2000: இக்குளிசைகளை நாளுக்கு இரண்டு வீதம் உட்கொண்டு வந்தால் டிப்பிறசனை வெற்றி கொள்ளக்கூடிய அனைத்து விட்டமின் பி உயிர்ச்சத்துக்களையும் உடல் பெற்றுக்கொள்ளும். மூலிகைக்கலவை – அஸ்வகந்தா பிளஸ்: மன அழுத்த அளவு மற்றும் பதற்றத்தின் அளவுகளை நெறிப்படுத்த உதவக்கூடிய பல்வேறு மூலிகைகளைச் சேர்வையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைக் கலவையே அஸ்வகந்தா பிளஸ். மனமற்றும் உடல் ரீதியான அல்லது உணர்ச்சிவசப்படல் காரணமாக அல்லது ஏதோ ஒரு விதத்தில் மனத் தாக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்படும் போது ஒருவரை நடத்திச் செல்வது உடலில் உள்ள அதிரினல் சுரப்பிகளாகும். அஸ்வகந்தா பிளஸ் ஆனது, ஒருவரின் ஞாபகத்தையும் நிதானத்தையும் விருத்தி செய்யவும், களைப்படைந்த அதிரினல் சுரப்பிகளுக்கு மீள சக்தியை வழங்கி பலப்படுத்தவும், பதற்றத்தை விடுவிக்கவும், நரம்புத் தொகுதியை அமைதிப்படுத்தியும், உங்கள் வீரியத்தை அதிகரிக்கவும், மேலும் நரம்புத் தொகுதிக்கு புத்துணர்ச்சியளிக்கவும் வேண்டிய உடல் ஆற்றலுக்கும் இயலுமைக்கும் உதவுகிறது. இவை மாத்திரமன்றி ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை ஒழுங்கையும் பின்பற்றவேண்டும். அதாவது போசாக்கான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, இயற்கையான சூரிய வெளிச்சத்தில் உடலைப்படவிடுதல், சமூகத்தவர்களுடன் ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபடல், மூளைப்பயிற்சி நல்ல சுவாசம், நச்சுத்தன்மை மிகுந்த சுற்றாடலிலிருந்து விலகியிருத்தல் போன்றவற்றை பின்பற்றலாம். இவற்றுக்கூட பின்னரும் கூட ஒருவர் டிப்பிறசனை உணர்வதானால் கவுன்சிலர்கள் என்று அழைக்கப்படும் மனநல ஆலோசகர்களையோ அல்லது உளவியல் நிபுணர்களையோ நாடலாம்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க