மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-02
கேள்வி:
எனது ஒன்றரை வயதுக் குழந்தை, நான்கு மாதத்திலிருந்து எக்சிமா நோயால் அவதிப்படுகிறாள். புல விதமான களிம்புகளையும் (கிறீம்களையும்), உடம்பு மேற்பூச்சுக்களையும், குடும்ப வைத்தியர் தந்த மருந்துகளையும் பயன்படுத்தியிருந்தோம். எந்த மருந்துமே பாவிக்கும் பொழுது நோயின் அறிகுறியைக் குறைப்பதை தவிர நிறுத்திவுடன் எக்சிமா மீண்டும் வந்துவிடுகிறது. ஆரம்பத்தில் கை, கால் நாடிப்பகுதிகளில் காணப்பட்டது. கடந்த 6 மாதத்தில் உடல் முழுவதும் பரவி விட்டது. இரவு முழுவதும் கடி வேதனையால் துன்பப்படுகிறாள். எனது குழந்தைக்கு தயவு செய்து ஏதாவது செய்ய முடியுமா?
பதில்:
எக்சிமா என்பது ஒரு வகை தோல் அழற்சியாகும். தோல் வியாதிகளில் 50வீதத்திற்கும் அதிகமான பங்கை இது பிடிக்கிறது. ஆனால் உணவுவகை மாற்றங்களையும், மூலிகை குறை நிரப்பிகளையும் எடுப்பதன் மூலம், கடி வேதனையைக் குறைப்பதோடு, நோய் குணப்படும் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
முதன் முதலாக உங்கள் குழந்தையின் உணவிலிருந்து பசுப்பால் கொண்ட பொருட்கள், கோதுமைத் தானிய (வீற்) உணவுகள், நொதித்த உணவுகள் (ஈஸ்ற்) ஆகியவற்றை முற்றாக நிறுத்தவேண்டும். இவற்றிற்குப் பதிலாக சோயா பால், குரக்கன் மா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். உணவில் புதிய காய்கறி வகைகள், பழவகைகளோடு கூட, எண்ணெய்த் தன்மை கொண்ட மீன் வகைகளை (உ-ம் ரியுனா, மக்றல்) சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை தோலின் உட்பகுதியை ஈரப்படுத்த உதவுகின்றன. மேலும் கலன்டியுலா அன் கொட்டுக்கொல கிறீம் என்னும் மேற் பூச்சுக் களிம்பையும், எல்ட பிளவர் பிளஸ என்னும் மூலிகைச் சேர்மானத்தையும் ஏடுப்பதன் மூலம், தோல் அழற்சியைக் குறைத்து, குணப்படுதலை அதிகரிப்பதோடு, தோல் சொறிவையும் குறைத்துவிடுகிறது.
இயற்கை மருந்துகள் உடலில் மாற்றத்ததை ஏற்படுத்த சிறிது காலம் தேவைப்படுகிறது. இங்கு 3 – 6 மாத காலத்தின் பின்பே நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
உங்கள் குழந்தை ஏதாவது ஒவ்வாமைக் காரணிகளால் துன்பப்படுவதாக இருந்தால், எந்தக் காரணிகள் இந்த ஒவ்வாமையைக் கொண்டு வருகின்றன என்பதைக் கண்டு கொள்ள உணவு ஒவ்வாமை பரிசோதனை (பூட் இன்ரொலறன்ஸ் ரெஸ்ற்) செய்து கொள்ளலாம். இலகுவாக செய்து கொள்ளக் கூடிய இப்பரிசோதனை மூலம் குழந்தைக்கு ஒவ்வாத உணவுக் காரணியைக் கண்டு கொண்டு, அதை உணவிலிருந்து தவிர்த்துவிடலாம்
Top