info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

கீல் வாதம் - (கௌட்)

கீல் வாதம் - (கௌட்) கௌட் எனப்படுவது உடலில் காணப்படும் யூறிக்கமிலத்தை ஆக்கச்சிதைவு தாக்கங்களினூடாக சமநிலையில் வைத்திருக்க முடியாத பிறப்புடன் கூடிய குறைபாடாகும். இதனை ‘ஆக்கச்சிதைவு மூட்டு வீக்கம்’ (மெற்ராபொலிக் ஆத்ரைற்ரிஸ்) எனவும் குறிப்பிடலாம். யூறிக் அமிலம் அதிகமாக உடலில் உற்பத்தியாகும் பொழுதோ அல்லது யூறிக்கமிலம் உப்பு கழிவகற்றப்படாத போது, இவ்வுப்பு (மொனோசோடியம் யூரேற்) மூட்டுப் பொருத்துகளிலுள்ள கசிவிழையங்களில், படிகங்களாக சேர்கின்றன. இப்படிகம், இழையங்களில் நோவையும் திடீரென வீக்கத்தையும் தருவதோடு, அதிகமாக சேர்ந்திருக்கும் பொழுது தோலைக் கிழித்து வெண்கட்டி கரைத்து விட்டது போன்ற வெளித்தள்ளளையும் தருகின்றது. சுhதாரணமாக யூறிக்கமிலம் குருதியில் காணப்பட்ட போதிலும், இதனளவு குருதியில் அதிகரிக்கும் பொழுது, இது படிகமாக மூட்டுச் சாய்வுகளிலும் அதனைச் சூழ்ந்த இழையங்களிலும் படிவாகிறது. மேலும் இது சிறுநீரக யூறிக் அமிலம் தோன்றுவதற்கும் காரணமாகலாம். பெரும்பான்மயான சந்தர்ப்பங்களில் காற்பெருவிரல் மூட்டுலேயே முதலில் வருகின்றது. இருப்பினும் ஏனைய மூட்டுக்களிலும் கெண்டைக்கால், குதி, முழுங்கால், மணிக்கட்டு, முழங்கை விரல்கள், முள்ளந்தண்டு ஆகிய இடங்களிலும் ஏற்ப்படக்கூடும். மிகவும் கடுமையான திடீரென தோன்றும் நோ வேதனையுடன், காற் பெருவிரல் மூட்டு வீங்கி, சிவந்து தொடுகையில் சூடானதாகவும் இருப்பதுடன், மூட்டு மடிக்க முடியாது கெட்டியாகவிருக்கும். எழுந்து நிற்பதற்கு அல்லது சிறிய தூரம் நடப்பதற்கோ முடியாமல் போகும். நோவும் வேதனையும், வீக்கமும் காச்சலும், மூட்டினுள்ளான படிகங்களினாலும், அதனைச் சூழ்ந்த இழையங்கள் வீக்கமடைந்து புண்ணாகிப் போவதனாலும் ஏற்ப்படுகின்றது. இந்நிலையில் மிகவும் லேசாக தொடும் பொழுதிலேயே மிகவும் தாங்கமுடியாத நோவைத் தரும். நீண்ட நாட்களாக குருதியில் யூறிக் அமில அளவு அதிகமாக இருக்குமாயின், யூறிக் அமில பளிங்குகள், காதுச் சோணையின் மிகவும் வெளிப்புற மடலிலும் படியக்கூடும். சில சமயங்களில் யூறிக் அமில கற்கள் சிறுநீரக கற்களில் ஒன்றாக தோன்றக்கூடும். குருதியிலுள்ள யூறிக் அமில அளவை அறிவதன் மூலம் கௌட் தோன்றியதனை உறுதிப்படுத்தலாம். குருதியில் யூறிக் அமிலம் பொதுவாக காணப்படுகின்றது. இதனளவு அதிகரித்த எல்லோருக்குமே கௌட் ஏற்பட்டுவிடுவதில்லை. கௌட் ஏற்ப்பட்டுவிட்டதாக சந்தேகித்தால், அதன் தாக்குதல் தணிந்த பின்பு சில தடவைகள் யூறிக் அமில அளவுக்கான சோதனை (சீறம் யூரேற் ரெஸ்ற்) செய்வதன் மூலம் உறுதிசெய்யலாம். வேறு திட்டமாக அறியக்கூடிய சோதனை முறையுண்டு ஆனால் அது செய்வதற்கு கடினமானதாகும். குருதியிலுள்ள யூறிக் அமிலத்தினளவானது, அதன் ஆக்கப்படும் அளவிற்கும், வெளியகற்றப்படும் அளவிற்கும் இடையிலுள்ள வேறுபாடாகும். பியுறின் எனப்படும் புரதக்கூறானது ஈரலில் நொதியத்தாக்கத்திற்குள்ளாகும் பொழுது யூறிக் அமிலம் தோன்றுகின்றது. வழமையாக உடலில் நடைபெறும் கலச் சிதைவின் பொழுதும் பியுறின் தோன்றுகின்றது. நாம் உணவாக உட்கொள்ளுவனவற்றில் சில அதிக அளவு பியுறினைக் கொண்டிருக்கின்றன. கௌட் நோய் தோன்றியவர்களில் பெரும்பான்மையனோர்க்கு, யூறிக் அமிலம் கழிவகற்றல் சிறப்பாக நடைபெற்றிருக்கவில்லை. கழிவகற்றில் மூன்றில் ஒரு பகுதியினைச் சிறுநீரகமும், ஏனைய பகுதியை உணவு கால்வாய்த் தொகுதியும் செய்கின்றன. தலைமுறையாகவே சிறுநீரக செயற்பாட்டுக் குறைபாடுடையவர்களுக்கு கௌட் தோன்ற அதிக வாய்ப்புண்டு. உடல் எடையை மிக விரைவாக குறைக்க முற்படும் பொழுது யூறிக் அமில அளவு தற்காலிகமாக அதிகரித்துவிடும், இது ஏற்கனவே உள்ள அமில அளவை அதிகரித்துவிடும். உணவில் அதிகமாக புரதத்தைத் சேர்த்துக் கொள்ளபவர்களுக்கு குறிப்பாக சிவப்பு இறைச்சி உண்பவர்களுக்கு இது தோன்றும் வாய்ப்பு அதிகமாகிறது. தற்போதைய ஆங்கில மருந்துகள் வைத்திய சிபார்சு இல்லாமலே, மருந்துக் கடைகளில் தற்காலிகமாக நோவை மறைக்கும் வில்லைகளான (அஸ்பிரின், இப்புறபேன,; நப்புறொக்சன்) போன்றவற்றை வாங்கலாம். இவற்றுள் அஸ்பிரின் ஏற்கனவேயுள்ள நிலையை மோசமாக்க கூடும். கடுமையான கௌட் தாக்குதலிற்கு வைத்தியர்கள், நோவையும் வீக்கத்தையும் தணிக்கும் கொல்சிசின்ஸ், செலிகொக்பி, இன்டோமெதாசின், நப்றொக்சன் போன்றவற்றை சிபார்சு செய்கிறார்கள். சில சமயங்களில் பிறிட்னிசோன் மருந்தும் பாவிக்கப்படுகின்றது. மேலும், எதிர்கால கௌட் திடீர் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக அலோபியூறினோல் என்னும் மருந்து சிபார்சிக்கப்படுகிறது. தாக்குதலிற் ஆட்பட்ட மூட்டை ஓய்வு நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்துகிறார்கள். அலோபியூறினோல் என்னும் மருந்து, யூறிக் அமிலம் உற்பத்தியாவதை குறைத்தாலும், சடுதியான நோய்த்தாக்கின் போது பயன்படுத்த முடியாது. இம்மருந்து எடுக்கத் தொடங்கினால் வாழ்க்கைக் காலம் முழுவதும் எடுக்கவேண்டியிருக்கும். பியூறின் என்னும் புரதக் கூற்றை உணவில் அதிகம் உட்கொள்ளும் பொழுது, யூறிக் அமிலம் அதிக அளவில் உடலில் உற்பத்தி செய்யப்படுவதனால், இவர்களுக்கு கௌட் தோன்றுமபாயம் அதிகமாகிறது. பின்வரும் உணவுகளில் பியூறின் அதிக அளவில் காணப்படுகின்றது. அஞ்சொவிஸ், புள்ளியன், ரோபூ இனிப்பு பாண் (இளங்கன்றுகளின் (செம்மறி, மாடு) உடற்பகுதிகளிலிருந்து - அங்கங்களிலிருந்து பெறப்பட்ட இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு), உலர்ந்த அவரைக் குடும்ப தாவர உணவுகள்இ வாத்து இறைச்சி. இதய இறைச்சி, கெரிங் மீன், சிறுநீரகம், ஈரல், மூளை, மக்கிரல் மீன், இறைச்சிப் பிளிவுகள், மிகச் சிறுதுண்டாக்கப்பட்ட இறைச்சி, மசில்ஸ், சூடை மீன், சிறிம்ஸ், புளிக்கச் செய்யும் மதுவம், புளிக்கச் செய்யும் முறையில் பெறப்படும் உணவுகள் (உ+ம்) மாமயிட், வெயிமயிட்), பழப்புளி பாவனையும் ஒரு காரணமாகலாம் என கருதப்படுகிறது. மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பீர் அருந்துவதைத் தவிர்க்கும் பொமுது கௌட் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது. சுத்திகரிக்கப்பட்ட சீனி (உ+ம் வெள்ளைச்சீனிஇ பழச்சீனி (பழங்களலும், பழரசங்களிலுமுள்ள இயற்கையான சீனி) குருதியில் யூறிக்கமில அளவைக் கூட்டுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே பாவனை மட்டுப்படுத்;த வேண்டும். போதியளவு நீர் அருந்தவேண்டும, சோடா வகையானவை தவிர்க்கப்படவேண்டும். மருந்துகள்: குறை நிரப்பி : உயிர்ச்சத்து சீ உயிர்ச்சத்து சீ, எடுக்கும் பொழுது சிறுநீர் வழியாக யூறிக்கமிலம் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டது அறியப்பட்டது. 500மிகி உயிர்ச்சத்து நாளுக்கு என்ற அளவில், நோய்த்தாக்கு ஏற்ப்பட்டவர்கள் ஆரம்பிக்கலாம். குறைநிரப்பி : குவாசெற்ரின் பிளஸ் குவாசெற்ரின் பிளஸ், என்னும் குறைநிரப்பியானது, நோவையும் வீக்கத்தையும் தணிப்பதாக செயற்படுகிறது. மூலிகைகள் சேர்மானம்: கவுச் கிராஸ் கொம்பிளெக்ஸ்: இதில் சிறுநீரக தொழிற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதை ஊக்குவிப்பதற்கான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புக்கு, டான்டிலயன், கவுச் கிராஸ், கிளீவேஸ், கிரவல் ருட், ஸ்ரோன் ருட், கோன் சில்க், ஆகிய மூலிகைச் சேர்மானமானது, மூத்திரப் போக்கை அதிகரிப்பதனால, சிறுநீரகத்தில் தங்கியிருக்கக் கூடிய நஞ்சுகள், கழிவுகள், நோய்க்கிருமிகள் அகற்றப்படுவதோடு, சிறுநீர்த் தடத் தொகுதியை வலுப்படுத்தி, நோயெதிர்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. குறைநிரப்பி: சேரா பெப்ரேஸ் இதுவொரு, இயற்கையில் காணப்படும், புரதத்தைச் சமிபாடு அடையச் செய்யக்கூடிய நொதியத்தைக் கொண்ட தயாரிப்பாகும். நோவையும், வீக்கத்தையும் தணிப்பதற்கு பயன்படுத்தப்படும் இப்புறபேன் போன்ற மருந்துகளுக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடியது. பக்கவிளைவுகளற்றது. இதனால் தற்போதைய நோய்த்தாக்கலைக் குறைப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்ப்படக்கூடியதையும் தவிக்கலாம்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க