மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
மகரந்த காய்ச்சல் (கே பீவர்) மகரந்த காய்ச்சல் உடலுக்கு ஒவ்வாமைக் காரணங்களால் ஏற்படுகின்றது. தும்மல், கண்களில் கடி, நீர்வடிவு, மூக்கில் நீர்வடிவு போன்றவற்றுடன் தொண்டையில் எரிவு, அரிப்பு அத்துடன் முட்டுமாதிரியான அறிகுறிகள் போன்றவற்றால் துன்பப்படுகிறார்கள். மகரந்த மணிகள் தாவரங்களில் தோன்றி வெளிவிடப்படும் பொழுது, இக்காய்ச்சல் காலம் ஆரம்பிக்கின்றது. நீண்ட நாட்களுக்கு மகரந்த காய்ச்சல் தொடர்ந்து இருக்குமானால, இது முட்டு நோய்கும், குழம்பிய நித்திரையால் ஏற்படும் நோய்களுக்கும் இடம் கொடுக்கும். நோய்க்கான ஒவ்வாமைக் காரணியை சூழலிருந்த முற்றாக அகற்றிவிட முடியாது. ஆனால் அறிகுறிகளை மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மருந்து, உயிர்ச்சத்து, குறை நிரப்பி உணவு உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை நல்ல நிலையில் வைத்திருப்பது, நோய் தோன்றும் காலத்தின் முன்பாக வருமுன் காப்போன் செயற்பாடாகும். இந்நோய்க்கு பின்வருவன பயன்படக்கூடும். மூலிகை மருந்துக் கலவை - எல்ட பிளவர் கெம்பிளக்ஸ் இந்த மூலகைக் கலவையானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் சமநிலைப்படுத்துவதனால், நோயின் அறிகுறிகளை தணிக்க உதவுகிறது. இச்சேர்மானத்தில் எக்கினேசியா (எக்கினேசியா அங்கஸ்ரிபோலியா) - உடலின் இயற்கையான நோயெதிர்புச் சக்தியைச் சமநிலைப்படுத்துவதற்காகவும், எல்டபிளவர் (சம்புகஸ் நைக்றா) - பற்றீரியா, வைரஸ் நோய்க்காரணிகளை வலுவாக எதிர்ப்பதற்காகவும், கோல்டன் சீல் (கைட்றஸ்ரிஸ் கனடென்சிஸ்) - வைரஸ் நோய் கிருமிகளினால் ஏற்பட்ட நோயறிகுறிகளைத் தணிக்க உதவுவதாகவும், நெற்ரில் லீவ் (ஏட்டிகா டயோய்கா) - வைரஸ், பற்றீரியா ஒவ்வாமைக் காரணிகளினால் தோன்றும் நோய்களை மாற்றுவதில் திறம்படச் செயலாற்றுவதோடு உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை சமநிலைபடுததுவதற்கான சேர்மானம் செய்யப்பட்டுள்ளது. மூலிகைக்கலவை - லூபா கெம்பிளக்ஸ் தும்மல், மூக்கு, தொண்டை, கண்கள் போன்ற பகுதிகளில் கடியை குறைக்கவும்இ இருமலைத் தணிக்கவும் இந்த துகள் பரப்பியைப் (ஸ்பிறே) பயன்படுத்தலாம். மூலிகை - யமோ உடலில் நோய் தோன்றும் பொழுது ஏற்படும் நோயெதிர்ப்பினை சமநிலைப்படுத்துவதோடு நுரையீரலையும் பலப்படுத்துகிறது. ஆகவே இது முட்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நல்ல பலனைத் தரும் மருந்தாகக் காணப்படுகின்றது. குறைநிரப்பி – எயார் பவர் இந்த கலவை மூச்சுக் குழாய்களில் படிந்த தடித்த இறுக்கமான சளியை, மென்மையானதாக்கி வெளியேற்ற உதவுகின்றது. குறை நிரப்பிகள் உயிர்ச்சத்து ‘சி’ உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பேணுவதோடு, நோயின் அறிகுறிகளையும் தணித்து, ஒவ்வாமை ஏதுக்களுக்கான உடலின் எதிர்ப்பைக் குறைத்து, சளியுற்பத்தியைக் குறைப்பதனால் மூச்சு இழுப்பையும் குறைக்க உதவுகின்றது. குறைநிரப்பி – கோசற்ரின் கெம்பிளக்ஸ் பொதுவாக பழங்களிலும் மரக்கறிகளிலும் நிறத்திற்கு காரணமானதாகும். இவற்றில் கோசற்ரின் எனப்படும் பயோபிளோனொயிட், மகரந்தக் காய்ச்சல் நிலைகளில், உயிர்ச்சத்து ‘சி’யுடன் சேர்த்துப் பயன்படுத்தும் பொழுது தொண்டை, மூச்சுக்குழல், சுவாசக் குழாய்களில் வீக்கத்தையும் நோவையும் குறைப்பதாக செயற்படுகின்றது. இது இயற்கையாக சிவப்பு, மஞ்சள் நிற வெங்காயம், சலொட்ஸ், கோஜெற்ஸ், புறக்கோலி போன்றவற்றில் கிடைத்தாலும், நோயுற்ற ஒருவருக்கு போதியளவில் கிடைப்பதில்லை. மகரந்த காய்ச்சலின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படக்கூடும். எனவே அவரவர் அறிகுறிக்கு தக்கவண்ணம் மேற்கூறிய மாத்திரைகளில் ஏற்றவற்றை எடுக்கவும். உதாரணத்துக்கு முட்டு குணம் உள்ளவர்கள் மூலிகைக்கலவை: எல்ட பிளவர் கெம்பிளக்ஸ் உடன் யமோ, பிறீத் என்பவற்றை மாத்திரம் எடுத்தால் போதும்.
Top