மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
எலும்புத் தொகுதி > மூட்டு வலி
மூட்டு வலி மூட்டுக்களில் நோவு வரும்போது, அன்றாட வழமையான வேலைகளைச்செய்வது கூட மிகவும் கடினமானதாகபோய்விடக்கூடும். இந்நிலையில் சாதாரண வாழ்க்கை முடங்கிப்போய்விடக்கூடும். குத்து வேதனையுடன் அடிக்கடி ஆரம்பிக்கும் மூட்டுப் பிரச்சினைகள் மூட்டு வலி மூட்டுக்களில் நோவு வரும்போது, அன்றாட வழமையான வேலைகளைச் செய்வது கூட மிகவும் கடினமானதாகபோய்விடக்கூடும். இந்நிலையில் சாதாரண வாழ்க்கை முடங்கிப்போய்விடக்கூடும். குத்து வேதனையுடன் அடிக்கடி ஆரம்பிக்கும் மூட்டுப் பிரச்சினைகள், காலம் செல்லச் செல்ல மோசமான பிரச்சனையாக மாறக்கூடியவை. தொடர்ந்து சில மாதங்களில் அல்லது வருடங்களில் இவை ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறிவிடும். அதாவது பிடிமானங்கள் நிலை கொள்ளவோ அல்லது ஒரு சில அடிகள் எடுத்து வைப்பது கூட கடும் வேதனையைத் தரக்கூடும். உங்கள் முழங்கால்களில், இடுப்பில், விரல்களில், முள்ளந்தண்டில் வலி, விறைப்பு, மொற மொற சத்தம் போன்றவற்றால் நீங்கள் அவதிப்படுகின்றீர்களா? விளையாட்டுக்களில் ஈடுபட்டு காயமடைவதன் விளைவாகவோ அல்லது வயது முதிர்ச்சியின் விளைவாகவோ மூட்டுக்களின் மென்மையான எலும்புகள் சேதமடைந்து அல்லது தேய்மான மடைந்து போவதன் காரணமாகவே இது ஏற்படுகின்றது. நாங்கள் வளர்ந்து வயது முதிரும் போது துரதிட்டவசமாக உங்கள் உடல் இந்த இழப்பினை மாற்றீடு செய்வதற்கு ஒரு புதிய மென் எலும்பினை அடிக்கடி மீளளிக்க முடிவதில்லை. மூட்டு எலும்பு அழற்சி, மூட்டு மென்சவ்வு அழற்சி (ஒஸ்ரியோ ஆத்திரைஸ் அன்ட் றுமற்ரோயிட் ஆத்திரைஸ்) போன்றன சிதைவடைந்து செயலிழக்கச்செய்யும் மூட்டு நோய்களுக்கு, மென் எலும்புகளில் ஏற்படும் இழப்பும் தொழிற்படாமையும் காரணமாக அமைந்துவிடலாம். மூட்டு எலும்பு அழற்சி என்பது மென் எலும்புகளை பாதிப்படையச் செய்யும் ஒரு மூட்டு நோயாகும். ஒரு மூட்டில் உள்ள எலும்புகளின் அந்தங்களை மூடியிருக்கும் ஒரு வழுக்கும் தன்மையான இழையமாகும். இது சுக நிலையிலுள்ள மென் எலும்புகள், எலும்புகள் ஒன்றின் மீது ஒன்று உராய்வின்றி அசைவதற்கு துணை புரிகின்றன. மேலும் இது உடல் அசைவுகளின் அதிர்வுகளிலிருந்து சக்தியை உறிஞ்சுகின்றது. மூட்டு எலும்பு அழற்சி நோயில் மென் எலும்பின் வெளிப்பகுதி, செயலிழந்தும் தேய்மானம் அடைந்தும் போகின்றது. மென் எலும்பின் கீழுள்ள எலும்புகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் நிலை ஏற்படுவதனால் வலியும், மூட்டுக்கள் அசைக்க முடியாத நிளையும் ஏற்படுகின்றன. மூட்டு மென் சவ்வு அழற்சி என்பது வலி, விறைப்பு, வீக்கம், ஏற்படுத்துகின்ற மூட்டின் உள் பரந்துள்ள மென்சவ்வு அழற்சியாகும். வழமையாக மெல்லியதும் மென்மையானதுமான மூட்டுப்பாயம் தடிப்பானதாகவும் கடினமானதாகவும் மாற்றமடைந்து விடுகிறது. எலும்புகளையும் மென் எலும்புகளையும் சேதமாக்கக் கூடிய அழிவை ஏற்படுத்தும், பலவிதமான இரசாயனங்களை உற்பத்தி செய்கிற சுரப்புகள் இந்த சவ்வுள் புகுந்து மென் என்புகளை தாக்குகின்றது. இந்த செயற்பாடுகளின் விளைவாக வலியும் அசைவின்மையும் ஏற்படுகின்றன. கொலஜன் பிளஸ் என்னும் தயாரிப்பு, ஆரோக்கியமான மூட்டுக்களையும், உறுதியான என்புகளையும் பெற்று, பேணிப் பாதுகாக்க, நாள்தோறும, பானமாக அருந்தக் கூடிய ஒரு தனித்தன்மை வாய்ந்த போசாக்குள்ள மாற்றீடாகும். மூட்டு மென் எலும்பு உருவாவதற்கு தேவையான மூன்று மிக அவசியமான மூலப் பொருட்களையும் அவற்றின் ஆகக் கூடிய மட்டத்தில் அது உங்களுக்கு வழங்குகிறது. 7.5 மி.கி கோலாஜன் கைட்ரோலைசேற்: கோலாஜன் என்பது மூட்டு மென் எலும்புகள் உருவாவதற்கு தேவையான தனியான மிக அவசியமான புரதமாகும். அத்துடன் இயற்கையாக காணப்படும் ஒரு புரதமாகும். இது உங்கள் உடலின் மொத்த புரதத்திலும் 30சதவீத்தினை பிரதிபலிக்கின்றது. உங்கள் மூட்டுக்களின் மென் எலும்புகள், தசை நார்கள் மற்றும் தோலின் உருவாக்கத்திற்கும் பராமரிப்பிற்கும் இது அத்தியாவசியமானது. நீங்கள் வயது முதிர்ச்சியடையும் போது உங்களது உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கோலாஜன் குறைவடைகிறது. நீங்கள் 45 வயதினை அடையும் போது உங்களுடைய கோலாஜன் மட்டம் குறைக்கப்பட்டுவிடும். இங்கு அவசியம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பல உணவுப் பொருட்களில் கோலாஜன் காணப்பட்டாலும் இது மிக அரிதாகவே உறிஞ்சப்பட்டு, தொகுதியின் ஊடாக நேராகவே சென்று விடுகிறது. கோலாஜன் கைற்றோலைசேட் என்பது உடைக்கப்பட்டு இலகுவாக உறிஞ்சப்படுவது உறுதி செய்யப்படுவதற்காக நீர் பாவிக்கப்படுகிறது. கோலாஜன் போலவே இதுவும் அதே அமினோ அமில கூட்டினைக் கொண்டுள்ளது. மென் எலும்புகளின் மீளமைப்புக்குத் தேவையான மிகச் சிறந்த மூலக்கூறுகளை இது கொண்டிருக்கின்றது. 1000 மி.கி குளுக்கோசாமைன் சல்பேற்: உடலில் இதன் முதன்மையான செயற்பாடு என்ன வென்றால் மென் எலும்பினை சுகமான நிலையில் பேணுவதற்கு உதவுவதாகும். மென் எலும்பு உருவாவதற்கு ஆதாரமான அமைப்புக்களை வழங்குவதில் இது அத்தியாவசியமானது. ஆகவே கோலாஜனுடன் மேலதிகமாக இதனை சேர்த்துக் கொடுக்கும் பொழுது அத்தியாவசிய எல்லா மூலக்கூறுகளையும் தேவையான அளவில் உங்கள் உடலுக்கு இது வழங்குவதனால், பல வருடங்களின் தேய்மானத்தினாலும் கிழிவுகளினாலும் மென் எலும்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை நீக்குவதற்கான ஆற்றலை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறது. 800 மி.கி கொன்றோற்றின் சல்பேட்: மென் எலும்புகளுக்கு நேரடியான இரத்த விநியோகம் இல்லாதிருப்பதனால், மூட்டுக்குள்ளே அவசியமான போசனைகளைக் கொண்டு செல்வதற்கு இது உதவுகிறது. ஆகவே கோலாஜனும் குளுகோஸமினைம் இவை அதிக அளவில் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்வதை உறுதி;ப்படுத்துவதில் கொன்றோறின் அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. கொலஜன் பிளஸ் ஒரு கரண்டி (30மி.கி) அளவு 100 மி.லி நீரில் கரைத்து ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் குறைந்தது 3 மாதங்கள் வரை பாவித்தல் வேண்டும். தொடர்ச்சியான பாவனை நீண்டகால நலன்களுக்காக விதந்துரைக்கப்படுகிறது. மூலிகைக் கலவை - பொஸ்வலியா பிளஸ் : ஒருவருக்கு மூட்டு நோவானது, ஒவ்வொரு நாளும்;, நாள் முழுவதும் இருக்குமாயின், குறிப்பாக காலைவேளையில் மூட்டுகளை மடக்க முடியாமல் விறைப்பாக இருக்குமாயின் இக்கலவையில், மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல், நோவு போன்றவற்றைத தணித்து, விறைப்பு நிலையையும் குறைக்கிறது. மேலும் இது உடலுக்கு சக்தியளித்து உற்சாகமூட்டுகிறது. 30 துளிகளை நாளுக்கு இரு தடவைகள் குடிக்கவேண்டும். இந்த கூட்டு சேர்மானத்தில் பல மூலிகைகள் அதி உச்சமாக செயற்படுவதற்காக வேறுபட்ட அளவில சேர்க்கப்பட்டிருக்கின்றன. மூலிகை: டெவில்ஸ் குளோ (காப்பகோபைற்றம் புறோகொம்பன்ஸ்) - இம்மூலிகை நோவைத்தணித்து எரிவையும் வீக்கத்தையும் குறைப்பதோடு, மூட்டுகளில் நீரினளவைக் குறைத்து, நோவு நீக்கியாகவும், மூலிகை:பொஸ்வெலியா (பொஸ்வெலியா செராட்ரா) - புண்ணான மூட்டுகளைக் குணப்படுத்துவதற்கும், மூலிகை: வைற் வில்லோ பார்க் (செலிக்ஸ் அல்பா ) - மூட்டுகளினுள் ஏற்பட்ட வீக்கம் நோவுடன் கூடிய புண்ணப்பட்ட நிலையை தணிப்பதற்கும், மூலிகை: யுக்கா (யுக்கா பிலமன்ரோசா) - மூட்டுக்களில் படிந்து மூட்டசைவை கட்டுப்படுத்தும் அசேதன இரசாயனப்பொருட்களைப் பிரித்து, உடைப்பதற்கும், மூலிகை: மெடோ சுவீற் (பிலிப்பென்டுலா உல்மாறியா). இது மூட்டுவாதம் அல்லது கீல்வாதத்தால் உடலில் ஏற்படும் நோவையும் காய்ச்சலையும் தணிப்பதற்குமாக பயன்படுத்தப்படுகிறது. மருந்தும்இ குறை நிரப்பிகளும் எடுத்துவரும் பொழுது;, உடலில் ஏதாவது மாற்றம் தெரிய ஆரம்பிக்க ஏறக்குறைய 2 - 4 வாரங்களாகும். ஆயினும் இவை வழமையான நோவு நீக்கிகளைப் போல்லல்லாது எதுவித தீய பக்கவிளைவுகளையும் தருவதில்லை. உணவு: வழமையாக உண்ணும், மாட்டிறைச்சி, முட்டை, சுத்திகரிக்கப்பட்ட மாவுணவு, சீனி வகைகள், விலங்கு கொழுப்பு, கோதுமை, பாலுணவுகள், கத்தரி, மிளகாய், உருளைக்கிழங்கு, தக்காளி, போன்றவற்றின் அளவைக் குறைக்கவேண்டும். இவற்றிற்குப் பதிலாக உள்ளி, வெங்காயம், செறி வகைப்பழங்கள், சிலெறி, பார்சிலி, அஸ்பறகஸ் ஆகிய மரக்கறிகள், இஞ்சி, முழுத்தானியம் பயன்படுத்திய மாவுகளைகள், நிறைய பச்சை இலைக்கறிகளை அதிகரிக்க வேண்டும். அன்னாசிப்பழமும் பப்பாளிப்பழமும் மிகவும் உகந்ததாகும். நோவையும், வீக்கத்தையும், புண்பட்ட நிலையையும் குறைக்கவல்ல மஞ்சளை, உணவில் பொருத்தமான இடங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.