info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

தலைப் பகுதி > ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

தலைப் பகுதி > ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு:
நாற்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் கடந்த 8 வருடங்களாக கடுமையான தலைவலியால் துன்பப்பட்டடிருந்தார். இவருக்கு கிழமையில் 2 – 3 தடவை இந்த தலைவலி. 24 – 36 மணித்தியாலங்களுக்கு நீடித்திருந்தது. தலையிடி தரும் நோவற்ற நாட்கள் இவருக்கு இருந்ததில்லை. வழமையான நோவு நீக்கிகள் (பெயின் கில்லர்) எதுவித நீண்ட நாள் பலனையுமு; தரவில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத நோவினால், நாள் முழுவதும் கட்டிலில் படுத்தேயிருக்க நேர்ந்தது.

இவரின் உணவு பெரும்பாலும் காலையில் பாணும் மதிய உணவில் சோறும் இரவில் ( மாப்பொருளாலான) பிட்டும் அமைந்திருந்தன. நாளில் பல தடவை தேநீர், கோப்பி அருந்தியிருந்தார், தனது வாலிபப் பருவம் அடைந்துவரும் பிள்ளைகள் பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். சில சமயங்களில் பிள்ளைகள் கல்லுரியில் இருந்து வீடு திரும்ப தாமதமானால் கூட தலையிடி தொடங்கிவிடும்.

இவருக்கான நோய் தீர்க்கும் திட்டத்தில் கோதுமை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் முற்றாக அகற்றப்பட்டு, தேநீர், கோப்பியும் விலக்கப்பட்டது. தினமும் உணவில் போதியளவு இலங்கை மரக்கறிகளுடன், சிலரி, பாசிலி, அஸ்பராகஸ், போன்றனவும் சேர்க்கப்பட்டன. மேலும் சில உணவு குறை நிரப்பிகளும் கொடுக்கப்பட்டன. 3 மாத சிகிச்சைக்கு பின்பு அவரின் தலையிடித் தாக்கலின் எண்ணிக்கை மாதத்திற்கு 1– 2 ஆகக் குறைந்திருந்தது. 6 மாதங்களின் பின்பு கடுமையான தாக்குதல்கள் இல்லாமல், 8 வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல் நிம்மதியாக இருக்கிறார்.

கடுமையான (ஒற்றைத்) தலைவலி என்றால் என்ன?
இது மிகவும் குறிப்பிட்ட வகையானதொரு தலைவலியாகும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் வரும் தலையிடி அதிர்வுற்றுத் துடிக்கும் (அடிக்கும்) நோவைத்தருகின்றது. மேலும் இது ஒலி, ஒளி புலன் உணர்ச்சிகளுடனும் வயிற்றுக் குமட்டல், வாந்தி போன்றவற்றுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. தாங்க முடியாத தலையிடியாக இருப்பதனால் அன்றாட காரியங்களைக் கூட செய்ய முடிவதில்லை. இத்தலை தாக்கு வந்து போனதன் பின்பு உடல் சோர்ந்து, களைத்து பலவீனப்பட்டு போனதாக உணர்கிறார்கள்.

சிலர் தலையிடி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு, ஓமோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் ஏதுக்களாகின்றன. மேலும் பதகளிப்பு (அங்சையிற்ரி), மனவழுத்தம் (ஸ்றெஸ்) ஆகியனவும் காரணமாகலாம்.பல காலமாக தலையிலுள்ள குருதிக்குழாய்கள் விரிந்து நெருக்கி சுருங்குதலுடன் தலையிடி தொடர்பானதென விஞ்ஞானிகள் கருதியிருந்தனர். ஆனால் தற்பொழுது இதுவொரு சில மூளைக்கலன்களை கட்டுப்படுத்தும், நிறமூர்த்தங்களின் ஒழுங்கீனமே காரணமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

ஒற்றைத் தலையிடி தோன்றும் அபாயம் யாருக்குண்டு?
இங்கிலாந்தில் எண்மரில் ஒருவர் தலையிடியினால் துன்பப்படுகின்றார். இது இருமடங்குக்கும் அதிகமாக ஆண்களைவிட பெண்களையே தாக்குகின்றது. மேலும் இது இளம்பிள்ளைகள் உட்பட எல்லா வயதினரையும் சமூக வகுப்பினரையும் பாதிக்கின்றது. ஒற்றைத் தலையிடி தாக்கொன்று 4 – 72 மணித்தியாலங்கள் நீடிக்கலாம். இத்தாக்குதல்களால் துன்பப்படுபவர் வருடமொன்றிற்கு சராசரியாக 13 தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார். தலையிடியானது, பாற்கட்டி, சொக்கிலட், திராட்சை இரசம் (சிவப்பு வைன்) போன்றவற்றால் மட்டுமல்லாது பல்வேறு வகையான காரணிகளாலும் தூண்டப்படுகின்றது. பெரும்பான்மையானோருக்குத் தனித்தனியாக வரும்போது சமாளித்து இருக்கக்கூடிய காரணிகள், கூட்டாக வரும்போது, தாங்கு நிலையைக் கடந்துவிடும் பொழுது, தலையிடித் தாக்கு ஏற்ப்படுகின்றது.

ஒற்றைத் தலையிடி மிகவும் தனிப்பட்டதாகவும், தூண்டும் காரணிகளும், நோயின் குறிகளும் ஒவ்வொரு பேருக்கும் பரந்த அளவு வேறுபட்டதாகவும் காணப்படுகின்றன. ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து நன்றே நோயைக் குணப்படுத்தும் போது, அதே மருந்து இன்னொருவரைக் குணப்படுத்தாமல் போகலாம். எனவே மருந்து குணப்படுத்தமாட்டாது என எண்ணி மனந்தளர வேண்டாம். மாறாக, வேறெந்த வழிகள் இருக்கின்றன என அலசிப்பார்த்து தனக்குச் சுகம் தரும் ஒரு திட்டத்தை வகுக்கவேண்டும்.

ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த அற்புத மருந்தொன்றும் இல்லை. ஆனால் இந்நிலையைத் திட்டமிட்டு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ஓற்றைத் தலையிடிக்கென நோய் நிலையை அடையாளம் காணவேண்டுமாயின், பார்வைப் புலத்தில் ஏற்ப்படும் ஒளிப்பருதி ‘ஓறா’ இருந்திருக்கவேண்டும் என்னும் தவறான கருத்துப் போக்கு காணப்படுகின்றது. இது உண்மைக்கு புறம்பானது. பலருக்கு ஒளிப்பருதி தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது. தலைவலிக்கு மேலே கூறப்பட்ட காரணிகளுடன் சந்ததி அங்கத்தினர், தலையிடி தாக்குதலுக்கு ஆட்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். குடும்ப நோய்ச் சரித்திரமும் ஒருவருக்கு நோய் நிலையை முடிவு செய்வதற்கு ஏதுவாகும்.

நோய் கண்டவரின் துன்பமும் துயரும் ஒரு புறமிருக்;க, இவரைச் சார்ந்தவர்களும் குறிப்பிடத்தக்கவளவில் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். தலைiலித் தாக்கு திடீரென வந்துவிடுவதால, செய்து வைத்த ஒழுங்குகளை குறுகிய நேரத்தினுள் மாற்றவேணடி ஏற்படுகிறது. எப்பொழுது தாக்குதலேற்படும் என எதிர்வு கூறமுடியாது நிலையில், முன்னேற்பாடாக திட்டம் போடமுடியாது. தாக்குண்டவர் துன்பத்தில் துடிக்க, சூழ இருப்பவரின் நோய் நீக்க முடியாத கையாலாகாத நிலை இன்னும் துன்பமானதாகும். சந்தோசமாக இணைந்து வாழும் இருவரில் ஒருவருக்கு இது வந்துவிட்டால், அவ்வுறவே பிரியுமளவுக்கு இந்நோய் பாதிக்கும். பெற்றோர்க்கு தலைவலி வந்துவிட்டால் சிறு பிள்ளைகள் குழப்பமடைந்து கவலைகொள்கின்றார்கள்.

உணவு¸ வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தாக்குதல் ஏற்ப்பட்டபோதான விபரங்கள் - நாள், நேரம், தாக்கின் கடுமைநிலை, கடந்த 24 மணி நேரத்தில் உட்கொண்ட உணவு போன்றவற்றை குறித்து வைத்துக்கொண்டால், தாக்குதலுக்கான தனிப்பட்டவருக்குரிய காரணிகளைக் கண்டுகொள்ளலாம். பின்னர் தெரிந்த காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஒழுங்காக உண்ணவேண்டும், சீனியளவு கூடிய உணவுகளைத் தவிர்ப்பதோடு குருதி வெல்லவளவு அதிகம் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். போதியளவு நீர் குடிக்கவேண்டும், கோப்பி, மதுபானம் தவிர்க்கப்படவேண்டும். ஒழுங்கான உடல் அப்பியாசமும் மன, உடலமைதிக்கான தியானப்பயிற்சியும் செய்யவேண்டும். தொடர்ச்சியான, திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் வேலைகளிலின்போது ஒழுங்கான சிறு ஓய்வுகள் எடுக்கவேண்டும்.

ஒற்றைத் தலையிடியால் துன்பப்படுபவர்கள் கீழே சிபார்சிக்கப்பட்ட மூலிகை மருந்துகளை, உணவுக் குறைநிரப்பிகளை எடுக்கலாம். வேறேதாவது நோவு நீக்கிகளை (பெயின் கில்லர்) எடுப்பதாயின் மூலிகை மருந்திற்கும் மற்றைய மருந்துகளுக்குமிடையே 2 மணித்தியால இடைவெளி இருப்பதாக வைத்துக்கொள்ளவேண்டும். இதன் வழியாக மருந்தின் அகத்தறிஞ்சலில் ஏற்ப்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம். மூலிகை மருந்தின் மூலம் நிலை முன்னேற்றம் ஏற்படுமாயின் நோவு நீக்கிகளைப் படிப்படியாகக் குறைத்து பின்னர் முற்றாக நிறுத்தலாம்.

மூலிகைக் கலவை: வைற் விலோ பாக் கொம்பிளெக்ஸ்:
வைற் விலோ பாக் கொம்பிளெக்ஸ் என்பது மூலிகைச் சேர்மானமாகும். இதிலுள்ள மூலிகைகள் ஒன்று சேர்ந்து கூடிய சக்திவாய்ந்த மருந்தாக, மூளையின் வௌ;வேறு செயற்பாடுகளை மேற்படுத்துவதனால் ஒற்றைத் தலையிடியைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். கீழே காணும் மூலிகைகள் வேறுபட்ட அளவுகளில் அதியுயர் சேர்மான சேர்திறனைத் தரும்பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

மூலிகை:பீவபீயு (ரெனசீரம் பதெனியும்):
இம்மூலிகையானது நோவகற்றும், வீக்கம் தணிக்கும், தூண்டிவிடும் தன்மைகளைக்கொண்டுள்ளது. தலையிடி, ஒற்றைத் தலையிடி போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்தலாம். மேலும் பல விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தலையிலமைந்த குருதிக்கலன்களில் பிடிப்பைத் தவிர்த்துக்கொள்வதனால் ஒற்றைத் தலையிடி தோன்றுவதற்கான பொறி தட்டப்படுவதில்லை. இது வயிற்றுக் குமட்டல், வாந்தி போன்றவற்றிலிருந்து விடுபடவும் பயனள்ளதாகும். மூளையையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி, அமைதியாக ஆறுதல் தரும் நித்திரை செய்யவுதவும்.

மூலிகை:பாசன் பிளவர் (பசிபுளோரா இன்கநாரா):
இதுவொரு அமைதிப்படுத்தும் மூலிகையாகும். கொந்தளிப்பு நிலையைத் தணிக்கும் தன்மையுடையதாதலால் பதகளிப்பையும் மனவழுத்தத்தையும் குறைவடையச் செய்ய பயன்படக்கூடும். மேலும் வீக்கம் தணித்து நோவை இல்லாதொழிப்பதாக செயற்படுவதனால் ஒற்றைத் தலைவலி நேரங்களில் பயன்படக்கூடும்.

மூலிகை:வைற் விலோ பாக் (செலிக்ஸ் அல்பா):
இது மிகவும் பிரசித்தமான மூலிகையாகும் ஏனெனில் இது அஸ்பிரின் போலவே செயற்படுகிறது. தலையிடியின் போது வரும் நோவைக்குறைத்து வீக்கம் தணிய வழிசெய்கிறது.

மூலிகை: வூட் பெற்றனி (ஸ்ராகிஸ் பெற்றனிகா):
இதுவொரு நரம்புகளை உற்சாகப்படுத்தும் மூலிகையாகும். இது பதகளிப்பு, மனவழுத்த நிலைகளைக் குறைப்பதற்கு உதவக்கூடும். மேலும் மனவழுத்தம் சார்பான தலைவலியின் போது பயன்படுத்தப்படலாம்.

மூலிகை: பட்டபேர் ( பெற்ராசைற் கைபிறிடஸ்):
இந்த மூலிகை பல நூற்றாண்டு காலமாக இருமல், அஸ்மா, தோற்புண் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டுவந்தது. அண்மைக் காலங்களில் ஒற்றைத்தலையிடி நிலையைக் குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் பருவகாலங்களில் வரும் ஒவ்வாமை காரணிகளால் ஏற்ப்படும் பாதகமான விளைவுகளைத் தீர்க்கவும் பயன்படுமென நம்பப்படுகிறது. பட்டபேர் முன்பு இதயநலனைப் பெருக்கும் மருந்தாக பயன்பட்டது. ஒற்றைத் தலையிடிக்கு பயன்படக்கூடிய செயற்திறன் கொண்ட இயற்கையான மாற்றுமருந்தென நீரூபிக்கப்பட்ட பரீட்சார்த்த ஆய்வுகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.

பரீட்ச்சார்த்த ஆய்வு 1
இந்த முதற்பரீட்சார்த்த ஆய்வில் 60, 18ற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஒற்றைத் தலையிடியால் துன்பப்படுபவர்கள் நாளுக்கு இரு தடவை போலியான மருந்தையும் (பிளசீபோ) அதேயளவான 50 மி.கி பட்டபேர் விசேட தயாரிப்புக்களும் 12 கிழமைகளுக்கு வழங்கப்பட்டன. தலைவலித் தாக்குகள் அதிகப்படியாக 52 சதவீதம் குறைவடைந்திருந்தன. 2 மாதங்களின் பின்பு 66 சதவீதம் ஆனவர்கள் 50 சதவீதம் தாக்குதலைக் குறைவாக அனுபவித்திருந்தனர். இன்னமும் கடுமையான நோவுக்காக மருந்தெடுப்பவர்களின் மருந்தினளவு 50 சதவீதம் குறைவாக பட்டபேர் கொடுக்கப்பட்டவர்கள் எடுத்திருந்தார்கள்.

பரீட்ச்சார்த்த ஆய்வு 2:
இதுவும் மேற்கூறிய முறையான பரீட்சார்த்த முறையாகும். ஆனால் பல நிலையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அமெரிக்கா, Nஐர்மனி ஆகிய நாடுகளில் 245 தலைவலியினால் துன்புறும் ‘ஒளிவளையம்’ (ஓறா) காணும், ஒளிவளையம் காணாத நோயார்கள் பங்குபற்றியிருந்தார்கள். நாளுக்கு இரு தடவை போலி மருந்தும் 50 மி.கி, 50 மி.கி அல்லது 75 மி.கி விசேட பட்டபேர் தயாரிப்புக்களும் 4 மாதங்களுக்கு வழங்கப்பட்டன. அதியுச்ச விளைவாக 58 சதவீதம் தலையிடித் தாக்கல் குறைவு, 3 மாதங்களில், 2 தரம் 75 மி.கி எடுத்தவர்களில் அவதானிக்கப்பட்டது. இது போலி மருந்து எடுத்தவர்களில் அவதானிக்கப்பட்ட 28 சதவீதம் வீழ்ச்சியைவிட புள்ளிவிபர அடிப்படையில் ஒப்பிடும்பொழுது குறிப்பிடத்தக்கதாகும்.

பரீட்ச்சார்த்த ஆய்வு 3:
கடுமையாக தாக்கும் ஒற்றைத்தலைவலியால் துன்புறும் 6 – 9 வயதுக்குட்ப்பட்ட 29 பிள்ளைகளும் 79 இளவயதினரும் (10 – 17 வயதினர்) பல-நிலைய பரீட்ச்சார்த்த ஆய்வின்போது, விசேட பட்டபேர் தயாரிப்பு 4 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட மருந்தினளவு வயது சார்ந்ததாகவும் 25 மி.கி - 100 மி.கி ற்கு இடைப்பட்டதாகவும் இருந்தது. இந்த மருந்து குறிப்பிட்ட காலத்தினுள் தாக்குதல் நடைபெற்ற எண்ணிக்கை குறைத்திருந்தது.

ஒவ்வொரு ஆய்விலும் விசேட பட்டபேர் தயாரிப்பு பயன்படுத்தப்பட்டபொழுது தலையிடித்தாக்கு குறிப்பிடத்தக்களவில் குறைந்ததைக் காட்டிநிற்கின்றன. பங்குபற்றியவர்களில் 3 இல் 2 ற்கு மேலான எண்ணிக்கையினர் 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் தலையிடித் தாக்குக்குறைந்திருந்ததை அனுபவித்திருந்தனர்.

உயிர்ச்சத்து: உயிர்ச்சத்து பீ கலவை:
இது நரம்புத் தொகுதியை அமைதியுறச் செய்து மனவழுத்தத்தைக் குறைப்பதில் பயன்படக்கூடும்.

மைகிரா ஸ்ரிக்:
மைகிரா ஸ்ரிக் என்பது 100 சதவீதம் தூய, தாவரங்களிலிருந்து கிடைக்கும் முக்கிய எண்ணைகளைக் (எசன்சல் ஒயில்) கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் மூலிகைகள்: லவன்டர், பெப்பமின்ற் ஆகியவற்றின் எண்ணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விரண்டும் தலைவலி, ஒற்றைத் தலைவலி, மனவழுத்தம், மனபதற்றநிலை ஏற்ப்பட்ட சந்தர்ப்பங்களில் இலகுவில் பயன்படுத்தலாம்.

மைகிரா ஸ்ரிக் இலகுவில் எடுத்துச்செல்லக்கூடிய சிறிய கைக்கடக்கமான உருளைகளாக கிடைக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும் தலைவலி வந்தபோது மைகிரா ஸ்ரிக் ஐ எடுத்து கன்னங்களின் மேற்புறத்தே, நெற்றிவந்து தொடுமிடும் (ரெம்பிள்) (காதுக்கருகாகவும், கண்ணிலிருந்து விலகியும்), நெற்றி, கழுத்தின் பின்புறம் ஆகியவிடங்களில் பூசிவிடவும். தலைவலி தொடங்கப்போகிறது என்று உணரும்போது பூசுவது மிகவும் நன்மைபயக்கும்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க