info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

நெற்ரி பொட் - மூக்கு கழுவும் உபகரணம்

மூக்குப் பகுதி > நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)

நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்): நெற்ரி பொட் என்பது மூக்கின் உட்பகுதிகளை கழுவிச் சுத்தம் செய்யும் உபகரணமாகும். களி மண்ணினால் செய்யப்பட்ட இவ்வுபகரணம் நீட்டமான மூக்கை கொண்டிருக்கும். இதைப் பயன்படுத்தி மூக்கைக் கழுவும் பொழுது, சளி தங்கியிருக்கக் கூடிய குழிகளைச் சுத்தம் செய்து, மூக்கு வழியை ஈரப்படுத்தி, காற்றுப்பாதையின் ஆரோக்கியத்தை மீளக் கொண்டுவருகின்றது. ஒவ்வாமைக் காரணிகள், தடிமன், தலையிடி, சளியடைப்பினால் ஏற்ப்படும் தலைக்குத்து (சையனசைரிஸ்) போன்றவற்றிலிருந்து விடுதலை பெற உதவுகின்றது. மிகப்பழைமையான யோகா அப்பியாச முறைகளில் கூட, சளி தடிமன், ஒவ்வாமை, ஆஸ்மா போன்ற நோய் நிலைகளுக்கு மிகவும் நோய் நிவாரணம் தரும் வகையில் பயன்பட்டிருக்கின்றது. ஸ்கன்டினேவியா நாட்டில் தடிமன் வந்த வேளை குணப்படுத்தும் சாதணமான இதைனையே பயன்படுத்துவார்கள் என அறியும் பொழுது சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. கடல் உப்பு நீரின் தொற்று நீக்கும், குணமாக்கும் தன்மைகள் பிரான்ஸ், ஜேர்மனி, பின்லாந்து போன்ற நாடுகளில் நன்றே அறியப்பட்டுள்ளன. இன்றைய நாட்களில், மூக்கு வழியை நன்றே சுத்தம் செய்யும் முறையானது, மருந்துகள், மூக்கினுள் சிந்தப்படும் துளிகள், உள்ளுறிஞ்சிகள், தெளிப்புகள் (ஸ்பிறே) போன்றவற்றுடன் ஒப்பிடும் பொழுது சிறந்ததாகவும், பரவலாக பயன்படுத்தப்படுமொன்றாகவும் காணப்படுகின்றது. எப்படி பயன்படுத்துவது? நன்றே அரைக்கப்பட்ட மேசை உப்பை இளந்சூட்டு நீரில் நன்கு கரைத்து நெற்ரி பொட் விடவும். உப்பு நன்றாக கரைந்துவிட்டதை உறுதிசெய்து கொள்ளவும். குளியலறையில் முகம் கழுவும் தொட்டியின் முன் குனிந்து, தலையை ஒருபக்கமாக சாய்த்து, ஒரு கையில் நெற்ரி பொட்டை வைத்துக்கொள்ளவும். மூக்கின் பின்புறமாக அமைந்த என்புக்குழியிலும் (சைனஸ்), சளியப்படை மேற்ப்பரப்புகளும், மிகவும் நுண்ணிய(உருப்பெருக்கு கண்ணாடியால் மட்டுமே பார்க்ககூடிய) மயிர் வளர்ச்சிகள் காணப்படுகின்றன. இவ்வசையானது, வயலொன்றில் காற்று வீசும் பொழுது நெற்பயிரானது ஒரேதிசையில் சாய்ந்து அசைவது போன்றிருக்கும். மெல்லிய சளியப்படையினால் போர்த்தப்பட்டிருக்கும் இம்மயிர்களில் பற்றீரியா, மகரந்தமணி, இறந்த வெண் சிறு துணிக்கைகள் போன்றன சளியப்படையில் ஒட்டிக்கொள்கின்றன. மயிர் வளர்ச்சியின் அசைவின் பொழுது, ஒட்டிக் கொண்டவை, ஒரு தொடர் அசைவின் காரணமாக மூக்கின் அடிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தொண்டையூடாக, இரைப்பையை சென்றடையலாம். வைரஸ் நோய்கிருமிகளும், ஒவ்வாமைக் காரணிகளும், மயிர்வளர்ச்சியின் செயற்பாட்டை திறனிழக்கச் செய்யும் பொழுதும் அல்லது சளியப்படை உலர்ந்து, கடினமாகும் பொழுதும்கடினமாகும் பொழுதும், இயல்பான மூக்கின் செயற்பாடு நடைபெறுவதில்லை. மூக்கின் அடிப்பகுதியை உப்பு நீர் கொண்டு கழுவும் பொழுது, காய்ந்து சளியப்படை, தூசி, மகரந்தமணி, வைரஸ், ஒவ்வாமைக் காரணிகள் அகற்றப்படுவதோடு, சளியப்படை ஈரப்படுத்தப்பட்டு, மயிர் வளர்ச்சியின் இயல்பான அசைவ மீளப்பெறப்படுகிறது. மூக்கின் உட்பள்ளமானது, என்பு குழி(சைனஸ்) களுடன் சிறிய வழிகளினால் இணைக்கப்பட்டுள்ளது. சளிய மென்படை, நோய் தொற்றின் போது வீக்கமடையும் பொழுது(உ+ம் தடிமன் (கோல்ட்) சிறு வழிகள் அடைக்கப்பட்டு சைனஸ் தோன்ற (சைனசைரிஸ்) வாய்ப்பளிக்கிறது. கிரமமாக மூக்கை கழுவி வந்தால், சிறுவழிகள் அடைப்புக்களின்றி தெளிவாக இருப்பதோடு, உப்புத் தண்ணீர் பயன்படுத்தப்படுவதனால், காரநிலை பேணப்படுவதனால் வைரஸ் நோய்க்காரணிகள் வளரமுடியாது போகின்றன. ஆஸ்மா வியாதி உள்ளவர்களின் நோய்தாக்கத்தின் பொழுது, சளியப்படை வீக்கமடைந்து, உட்சுவாச வளியானது அடைக்கப்படுகிறது. நெற்ரி பொட் கொண்டு கழுவுவதனால் இந்நிலை நீங்க உதவி செய்யும். ஏன் இதை நான் பயன்படுத்த வேண்டும்? நேற்ரி பொட் கொண்டு மூக்கைக் கிரமமாக கழுவி வந்தால், மூக்குக்குழி, மேல் சுவாசத் தொகுதி ஆகியவற்றில் ஏற்ப்படக் கூடிய நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம். பாவனை முறை - நெற்ரி பொட்டை ஆயத்தாமாக வைத்துக்கொள்ளவும். - 1 தேக்கரண்டி உப்பை நெற்ரி பொட்டில் இட்டு, இளந் சூட்டு நீரில் (8 அவுன்ஸ்) நன்கு கரைக்கவும். நன்கு கரையாத உப்பு துகள்கள் நாசியில் அரிப்பை ஏற்ப்படுத்தும், உப்பு நன்கு கரைந்திருந்தால் அரிப்பு ஏற்ப்படாது. முதன் முறை பயன்படுத்தும் பொழுது, 1 தேக்கரண்டியிலும் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம். சில நாட்கள் அனுபவத்தின் பின்னர், அளவை 1 தேக்கரண்டிக்கு உயர்த்திக் கொள்ளலாம். (உப்புக் கரைசலை ஒரு பாத்திரத்தில் செய்து, நெற்ரி பொட்டினுள் விடலாம்). - முகம் கழுவும் தொட்டியின் முன் நின்று கொண்டு தலையை ஒரு புறம் சரிக்கவும் - (ஒரு காது கிடையாகவும் மற்றையது மேலாகவும் வரும்வரை) - நெற்ரி பொட்டின் நீண்ட மூக்கை, மேற்புறமமைந்த மூக்குத் துவாரத்தினூடு, அது உட்புகக் கூடிய தூரம் வரை செலுத்திய பின், நெற்ரி பொட்டை சற்று உயர்த்தி மெதுவாக உப்பு நீரை உள்ளே விடவும். வாயினால் சுவாசிக்க வேண்டும். கீழமைந்த மூக்குத் துவாரத்தினூடாக நீர் வெளியேறும். - ஏறக்குறைய அரைவாசி நீரை ஒரு மூக்குத் துவாரத்தினூடு விட்டபின் நிறுத்தி, தலையை மறுப்பம் சாய்ந்து, இப்பொழுது மேற்புறமமைந்த மூக்குத் துவாரத்தனூடாக எஞ்சிய நீரை விடவும். - இப்பொழுது மூக்குத் துவாரம் சற்று காயும் வண்ணம, வேகமாக வெளி சுவாசிக்கவும். வெளி வரக் கூடிய கழிவுகளைச் சீறியகற்றவும். சில சமயங்களில் பலதடவை சீறியகற்ற வேண்டியிருக்கும். - இப்பயிர்ச்சியின் ஆரம்பத்தில், காலையிலும், மாலையிலும் செய்யலாம். அதிகமாக கழிவு தங்கியிருந்தால், நாளுக்கு 3 - 4 தடவை செய்யலாம். ஒரு கிழமை பாவனையின் பின்னர், மூக்கு அடைப்பின்றி, சுத்தமாக இருப்பதை உணர்வீர்கள். இந்நிலையில, நாளுக்கு காலையில் ஒரு தடவை பாவித்தால் போதுமானதாகும். மேலும் மூக்கடைப்பு அல்லது சளிகூடி அடி மூக்கினூடு சிந்துவதாக உணர்ந்தால், மூக்கை கழுவிக் கொள்ளலாம். கிரமமாக மூக்கைக் கழுவுவதனால் ஏற்படும் அனேக நன்மைகளில் சில: - தெளிவான, அடைப்பில்லாத மூக்குத் துளைகள் கிடைப்பதனால் சுவாசம் இலகுவாகிறது. - ஆதிகமாக சுரக்கப்பட்ட சளியமும், அதிலகப்பட்ட நோய்க்காரணிகளும், ஒவ்வாமைக் காரணிகளும், கழிவுகளும், தூசி, புகை, அரிப்பை ஏற்ப்படுத்தும் ஏதுக்கள் ஆகியனவும் கழிவி அகற்றப்படுகிறது. - மூக்குத் துளைகள் உலர்வாக இருந்தால் அவற்றை ஈரப்படுத்துகின்றது. மூக்கின் உலர் நிலையால் ஏற்படும் அசௌகரியம் தவிர்க்கப்படுகிறது. - உலர் காலநிலைகளில் ஏற்படக் கூடிய சளியத் தேக்கத்தை அகற்ற உதவுவதோடு, மூக்கு இரத்த போக்கு தவிர்கிறது. - உடலின் முதல் நோயெதிர்ப்பு பொறி முறையான மெல்லிய சளியப்படையல் நோய்க்காரணிகளை அகப்படுதல் செய்முறையினை திறம்பட செய்ய வேண்டிய நிலையினை தருகின்றது. - இச்செய்முறை இலகுவானது, இயற்கையானது, மருந்துகளற்றது, செலவு குறைந்தது, எவரும் இலகுவில் செய்யக் கூடியது. - மூக்கின் உட்புறம் ஆரோக்கியமாக இருப்பதனால் சுவையுணர்வும், முகர்வுணர்வும் (மோப்பம்) மேம்படுகிறது. - சுவாசத் தொகுதி சம்பந்தமான நோய்களான ஆஸ்மா, மகரந்தக் காய்ச்சல் (கே பீவர்), நீண்ட நாளாக இருக்கும் தடிமன்(கோல்ட்), காச்சல் (இன்புளுவென்சா), சைனஸ் என்னும் சளிச் சேர்க்கை, போன்ற நிலைகளில் நீங்க மிகவும் பயனுள்ளதாகும். நோய் நிலை மாற்றப்படுவதனால் வாய்வழிச் சுவாசம், இயல்பான மூக்கு வழிச் சுவாசத்திற்கு மாற்றப்படுகின்றது. மூக்கைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதனால், தொண்டை, சுவாசக் குழல் பாதைகள் சுத்தமாக இருப்பதுடன் பார்வை தெளிவுறுவதுடன, தெளிவான சிந்திக்க வழி சமைக்கிறது. - நோய்க்காரணிகள் அகற்றப்படுவதனால் உடலின் நோயெதிர்ப்பு செயற்பாட்டிற்கான தேவை குறைக்கப்படுகிறது. முக்கிய குறிப்பு: மூக்கு கழுவும் முறையானது, சிகிச்சை முறையொன்றிற்கு பதிலாகாது. மூக்கு, காது, தொண்டை வழிகளில் நீண்ட நாள் நோய்கண்டவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க