மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.
கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய
தோல் சம்மந்தமான > விட்ரிலைகோ - தோல் நிறம் மாறுதல்
விட்ரிலைகோ - தோல் நிறம் மாறுதல் கறுப்பு நிற எல்லை வட்டங்களை சுற்று வட்டத்தில் கொண்டு, வெண்கட்டி போன்ற, வெள்ளைத் தழும்புடையதாக சருமம் மாறி விடுதல் விட்ரிலைகோ என்று கூறப்படுகிறது. தோல் நிறத்தினை உருவாக்கும் நிறமணி தோற்கலங்கள் தோலில் அற்றுப்போதலே இதற்கு முக்கிய காரணமாகும். சூரிய வெளிச்சத்திற் படக்கூடிய பாகங்களான முகம், உதடுகள், கைகள், பாதங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த அடையாளங்கள் பொதுவாக ஏற்படுகின்றன. அத்தோடு அக்குள், காலிறைப் பகுதிகளிலும் வாயைச் சூழவும், கண்கள் மூக்குத்துவாரங்கள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளிலும் இது தோன்றக்கூடும். சிலருக்கு தலையிலும் வரக்கூடும். இவ்வாறு தலையின் சருமப்பகுதியில் ஏற்ப்படும் நிறமணிக் கலங்களின் குறைபாடு இப்பகுதியில் வளரும் தலைமயிரை பழுப்பாகவோ வெள்ளையாகவே மாற்றியும் விடுகிறது. இந்த நிறமணிக் கலங்களின் ஒழுங்கீனத்துக்கான மிகச்சரியான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை என்றே கூறவேண்டும். எனினும் நோய் எதிர்ப்புச் சக்தியின் வலைத்தொடர்புகள், ஓமோன் இணைப்புக்கள், விட்டமின் ‘டி’ குறைபாடு, பரம்பரை அலகுகள் போன்றவையே இதற்கு காரணமாகலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். குடும்ப அலகுகள் இதில் 20 தொடக்கம் 30 வீதம் வரையில் காரணமாகிறது. விட்ரிலைகோவுக்கான சிகிச்சையில் தோல் நிறமணிகளை மீள உருவாக்கி நிலை நிறுத்தலும் தோலின் தோற்றத்தை சரிப்படுத்துதலும் இலக்காக இருக்கின்றன. மூலிகைக் கலவை – கேலா பிளஸ். இக் கலவை கேலா, மன்ஜிஸ்தா, பக்குச்சி, பேடொக் ஆகிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தோற்பகுதியை சுற்றிக் காணப்படும் தோல் நிறமூட்டிக் கலங்களின் வலிமையை அதிகரித்து தோலின் நிறத்தை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வருவதைத் தூண்டும். மேலும் தோலுக்கு ஆரோக்கியமான மினுமினுப்பைக் கொடுத்து தோல் நிறமற்றுப் போவதைக் குறைத்து விடுவதோடு இரத்தத்தை தூய்மையாக்கவும் உதவுகிறது. மூலிகைக்கலவை – மன்ஜிஸ்தா அன்ட கேலா கிறீம்: மேற்குறிப்பிட்ட பிரதான நான்கு மூலிகைகளைக் கொண்டு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட களிம்பு (கிறீம்) இதுவாகும். தோல் நிறமற்றுப் போவதைத் தடுத்து ஆரோக்கியமான தோலாக மாற்ற இது உதவும். உயிர்ச்சத்து – விற்றமின் ‘டி’: எமது தோலின் நிறத்தை பேணுவதற்கு விற்றமின் டி அவசியம். அதிலும் கருமையான தோல் நிறத்துக்கு அதிக விட்டமின் டி தேவைப்படுகிறது. சூரிய வெளிச்சம்படும்பொழுது எமது தோல் இயல்பாக விட்டமின் டி யைப் உற்பத்தி செய்கிறது. ஆனால் இலங்கையைப் போன்று ஐரோப்பாவில் வாழும் நாம் வருடம் தோறும் சூரிய வெளிச்சத்தைப் பெறுவதில்லை. எனவே விட்டமின் டி யைக் கொண்ட குறை நிரப்பிகளை உட்கொள்வதன் மூலம் நாம் எனது உடலின் விட்டமின் டி அளவினை கூட்டிக்கொள்ள முடியும். குறைநிரப்பி – டி.எல்.பி.ஏ.: இது எல்-பீனைல்அலனின் என்ற அமினோ அமிலமாகும். இது தோற் கலங்களின் நிறமூட்டித் தன்மையை மேம்படுத்தும். நிறமாற்றமடைந்த தோல் சிறுபகுதிகள் விட்ரிலைகோ பரவக்கூடிய ஒரு நோயா என்று சொல்வது கடினம். சிலருக்கு இந்த நிறமாற்றமடைந்த சிறுபகுதிகள் பரவுவதில்லை. வழமையாக இத்தோல் ஒழுங்கீன நிலையானது முன்னேற்றமடையக்கூடியது. எனினும் நாளாக நாளாக இது உடலின் ஏனைய பாகங்களிலும் தோன்றக்கூடியது. சிலருக்கு பல வருடங்களானாலும் மிக மெதுவாகவே தோன்றும். மற்றவர்களுக்கு சடுதியாகத் தோன்றிவிடும். உடலியல் மற்றும் மனோரீதியான அழுத்தங்களின் போது மேலதிகமாக தோற் நிறமாற்றம் நிகழ்வதாக முறையிடுகின்றன. விட்ரிலைகோவானது பாதிக்கப்பட்டவருக்கு எதுவித உடல் பாதிப்புக்களையோ அரிப்பு போன்ற தொந்தரவுகளையோ தரமாட்டாது. ஆனால் இவர்கள் தமது தோற்றம் அழகற்றுப் போவதால் விரக்தியும் மனக்கவலையும் அடைகின்றார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையும் கடுமையாகப் பாதித்துவிடுகிறது. ஒருவரது தோற்றமும் இமேச்சும் அவருக்கு முக்கியம். அதிலும் இளவயதினருக்கு இது மிகுந்த முக்கியமாக இருக்கிறது. மனதில் அதிகமான விரக்தியும் மனச்சோர்வும் துரதிஸ்டவசமாக இந்த நிலைமையை மேலும் மோசமாக்ககூடும். இதனால் அவருக்கு தனது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தக்கூடிய விற்றமின் பி கொம்பிளக்ஸ் மற்றும் அஸ்வகந்தா பிளஸ் ஆகியவற்றையும் உட்கொள்வது நல்லது.. இது அவரது மன அழுத்த ஓமோன்களையும் ஒழுங்குபடுத்தும். முன அழுத்தம் குறையும் போது ஒருவருக்கு விட்ரிலைகோ மேலும் வருவதும் குறையும்.
Top